எதிர்க்கட்சி தலைவராகிறார் ஓபிஎஸ்… ஓரங்கட்டப்படும் ஈபிஎஸ்!

 

எதிர்க்கட்சி தலைவராகிறார் ஓபிஎஸ்… ஓரங்கட்டப்படும் ஈபிஎஸ்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் 159 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளார். தோல்விக்கு பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

எதிர்க்கட்சி தலைவராகிறார் ஓபிஎஸ்… ஓரங்கட்டப்படும் ஈபிஎஸ்!

இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் அதிமுகவினர் மும்முரம் காட்டிவருகின்றனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யலாம் என அக்கட்சி செய்தித்தொடர்பாளர் கோவை செல்வராஜ் கருத்து தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்த அதிமுகவினரின் விருப்பமும் அதுதான் என சொல்லப்படுகிறது.

காரணம் சென்னையிலுள்ள தனியார் ஹோட்டலில் முன்னாள் அமைச்சர் ஒருவர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் அமைச்சர் ஒருவரை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க அதிமுகவில் சில எம்.எல்.ஏக்கள் விருப்பம் தெரிவிப்பதாக தெரிகிறது. சென்னையில் முகாமிட்டிருக்கும் எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இதுவரை வாழ்த்து பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் நாளை மறுநாள் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் ஒரு குழுவினர் தனியே ஆலோசனை நடைபெற்றுவருகிறது.