“மு.க அழகிரியால் பாதிக்கப்படுவது திமுக மட்டுமே” – அதிமுக எம்.எல்.ஏ விமர்சனம்!

 

“மு.க அழகிரியால் பாதிக்கப்படுவது திமுக மட்டுமே” – அதிமுக எம்.எல்.ஏ விமர்சனம்!

மதுரையில் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் காலியாக இருக்கும் சுகாதாரத்துறை பணியிடங்கள் கூடிய விரைவில் நிரப்பப்படும். அதிமுக தலைமையில் மட்டும் தான் கூட்டணி அமையும். முதல்வர் வேட்பாளரும் எடப்பாடியார் தான் என்பதில் உறுதியாக இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவெடுக்கப்படும்” என்று கூறினார்.

“மு.க அழகிரியால் பாதிக்கப்படுவது திமுக மட்டுமே” – அதிமுக எம்.எல்.ஏ விமர்சனம்!

தொடர்ந்து, “எல்.முருகன் முதல்வர் வேட்பாளர் பற்றி தெரிவிப்பது எல்லாம் அவருடைய கருத்து. திமுக தற்போது நடத்தி வரும் கிராம சபைக் கூட்டங்களால் எந்த பயனும் கிடையாது. மக்களை தூண்டி விடுவதற்கே கிராம சபை. எம்.ஜி.ஆர் குறித்து சீமான் விமர்சனம் செய்து எல்லாமே உள் நோக்கத்துடன் தான்” என்று விமர்சித்தார்

மேலும், ” கமல்ஹாசன் சிறப்பான நடிகரும் கிடையாது, அரசியல்வாதியும் கிடையாது. மு.க அழகிரியின் அரசியல் வருகை திமுகவை மட்டும் தான் பாதிக்கும். பிற கட்சிகளை அல்ல. தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமையை ஏற்று எந்த கட்சி கூட்டணி அமைக்க முன்வருகிறதோ அவர்களுடன் கூட்டணி அமைக்கப்படும்” என்று தெரிவித்தார்.