முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ தனித்தனியாக சந்திக்கும் அமைச்சர்கள்.. என்ன காரணம்?!

 

முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ தனித்தனியாக சந்திக்கும் அமைச்சர்கள்.. என்ன காரணம்?!

செயற்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் முதல்வர் பழனிசாமி மற்றும் ஓபிஎஸ்-ஐ அமைச்சர்கள் சிலர் தனித்தனியாக சந்தித்து பேசியது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக தேர்தல் பணியை முடுக்கிவிட்ட உடனே, அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்? என்ற பிரச்னை எழுந்தது. இதற்கு அமைச்சர் செல்லூர் ராஜு முதன்முறையாக பிள்ளையார் சுழி போட, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரே ட்வீட்டால் அதிமுகவில் பூகம்பத்தை கிளப்பிவிட்டார். கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக அதிமுகவில் இந்த பிரச்னை நீடித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் முதல்வர் வேட்பளார் பற்றி முடிவெடுக்கப்படும் என ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டும் பிரச்னை ஓய்ந்ததாக இல்லை.

முதல்வர் எடப்பாடி, ஓபிஎஸ்-ஐ தனித்தனியாக சந்திக்கும் அமைச்சர்கள்.. என்ன காரணம்?!

இதனைத்தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியே கோஷமிட்டு, அதிமுக இரு பிரிவாக இருப்பதை வெளிச்சம் போட்டு கட்டினர். அதனால் இந்த பிரச்னைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய அதிமுக தலைமை, இன்று அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தது.

அதன் படி இன்னும் சிறிது நேரத்தில் செயற்குழு கூட்டம் கூடவிருக்கிறது. இந்த நிலையில் அதிமுக அமைச்சர்கள், எடப்பாடி மற்றும் ஓபிஎஸ்-ஐ அவர்களது இல்லங்களுக்கு தனித்தனியே சென்று சந்தித்தது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் துரைக்கண்ணு, நிலாஃபஏ கபில், கடம்பூர் ராஜு ஆகியோர் இன்று காலை திடீரென முதல்வரை சந்தித்த அதே வேளையில் அமைச்சர் விஜயபாஸ்கர் துணை முதல்வர் பன்னீர் செல்வதை சந்தித்தார் என்பது கவனிக்கத்தக்கது.