#Exclusive ராயபுரம் தொகுதியின் செல்லப்பிள்ளை…. அடுத்த முதல்வர் நீங்கள் தானா?

 

#Exclusive ராயபுரம் தொகுதியின் செல்லப்பிள்ளை…. அடுத்த முதல்வர்  நீங்கள் தானா?

சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் 7வது முறையாக களம் காண்கிறார். கடந்த 2016 தேர்தலிலும் இதே தொகுதியில் வெற்றி பெற்ற அவர் மீண்டும் ராயபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னதாக இதே தொகுதியிலிருந்து, 1991, 2001, 2006, மற்றும் 2011 தேர்தல்களில் வெற்றி பெற்றார். முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராகப் பணியாற்றி உள்ள இவர் 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் வரை தமிழகச் சட்டப்பேரவைத் தலைவராக செயல்பட்டார். ராயபுரம் தொகுதியின் செல்லப்பிள்ளையாக இருக்கும் ஜெயக்குமார் இம்முறையும் எளிதில் வெற்றிபெற்றுவிடுவார் என்பதை ஆதரவாளர்கள் ஆணித்தரமாக நம்பும் நிலையில், அமைச்சர் ஜெயக்குமார் டாப் தமிழ் நியூஸ் சேனலுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி இதோ!

#Exclusive ராயபுரம் தொகுதியின் செல்லப்பிள்ளை…. அடுத்த முதல்வர்  நீங்கள் தானா?

ராயபுரம் தொகுதியில் உங்களுக்கு பலத்த வரவேற்பு இருக்கிறதே?

இது இன்று மட்டுமல்ல எம்ஜிஆரின் கோட்டை இந்த ராயபுரம். எப்போதுமே இங்கு வரவேற்பு இருக்கும்.

உங்கள் தொகுதியில் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும், யார் வீட்டு விசேஷமாக இருந்தாலும் நீங்களே கலந்து கொள்வீர்கள் என்று சொல்கிறார்களே?

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எனக்கு சித்திரம் வரைய வேண்டும் என்றால் ராயபுரம் என்ற சுவர் முக்கியம். எனக்கு முழுமையான அங்கீகாரம் கொடுத்து என்னை அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா என்னை உலகத்திற்கு அடையாளம் காட்டியது ராயபுரம் தொகுதி மக்கள் தான். அவர்களுக்கு நாம் எப்போதும் நன்றிக்கடன்பட்டவனாக உள்ளேன்.

#Exclusive ராயபுரம் தொகுதியின் செல்லப்பிள்ளை…. அடுத்த முதல்வர்  நீங்கள் தானா?

முக்கியத்துறையின் அமைச்சராக இருந்துள்ளீர்கள், இருக்கிறீர்கள்; அப்படி முக்கிய துறைகளின் பொறுப்புகளையும் கவனித்துக்கொண்டு சட்டமன்ற தொகுதியையும் கவனிப்பது உங்களுக்கு சிரமமாக இல்லையா?

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவது சட்டமன்ற உறுப்பினரின் அடிப்படை கடமை. அந்தக் கடமையை நான் ஆரம்பத்திலிருந்தே நிறைவேற்றி வருகிறேன். அதனால் தான் மக்களின் ஏகோபித்த ஆதரவு எனக்கும் கழகத்திற்கும் உள்ளது. அதனால் இதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை.

#Exclusive ராயபுரம் தொகுதியின் செல்லப்பிள்ளை…. அடுத்த முதல்வர்  நீங்கள் தானா?

மீனவர்களுக்காக ஐஸ் ஃபேக்டரி கோரிக்கை நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் இருக்கிறதே?

சென்னை மீன்பிடி துறைமுகத்தில் அழகான மீன் மார்க்கெட்டை கட்டிக் கொடுத்துள்ளோம். அதேபோல் ரூ. 15 கோடி ரூபாயில் படகுகள் நிறுத்தி வைக்கவும், 155 கோடி ரூபாயில் சென்னையில் மீன்பிடி தளமும் அமைத்து கொடுத்துள்ளோம். ஒவ்வொரு மீனவ குடும்பத்திற்கும் 19 ஆயிரம் ரூபாய் நேரடியாக செல்கிறது என்றால் அது அம்மாவின் அரசில் தான். ஐஸ் ஃபேக்டரி அமைக்க தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய முன்வந்துள்ளன. அதற்கான பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. தேர்தல் அறிக்கையிலும் நிறைய வாக்குறுதிகள் கொடுத்து உள்ளோம். அதையும் நாங்கள் நிச்சயமாக நிறைவேற்றுவோம்.

#Exclusive ராயபுரம் தொகுதியின் செல்லப்பிள்ளை…. அடுத்த முதல்வர்  நீங்கள் தானா?

ராயபுரம் தொகுதியின் ஒவ்வொரு வீட்டுப் பிள்ளையாக இருக்கிறீர்களே? அது எப்படி?

என்னை அவர்கள் எங்கள் வீட்டு பிள்ளையாக தான் பார்க்கிறார்கள். நான் எப்போதும் எளிமையானவன். நான் சைக்கிளில் போவேன்; ரிக்ஷாவில் போவேன்.

#Exclusive ராயபுரம் தொகுதியின் செல்லப்பிள்ளை…. அடுத்த முதல்வர்  நீங்கள் தானா?

அதிமுகவின் முக்கிய அமைச்சராக இருக்கும் நீங்கள் ரிக்ஷாவில் செல்வது என்பது அடுத்து எம்ஜிஆராக ஜெயக்குமார் மாறுகிறாரா என்ற கேள்வியை எழுப்புகிறதே?

தலைவருடன் யாரையும் ஒப்பிட கூடாது. ஒருவர் எம்ஜிஆர் ஆட்சியை தருவேன் என்றார்; ஒருவர் நான் தான் எம்ஜிஆர் என்றார். எம்ஜிஆர் எங்கள் சொத்து; அவரை சொந்தம் கொண்டாட எங்களுக்குத்தான் உரிமை உள்ளது. அவருடைய அருளாசி எங்களுக்கு இருக்கும் போது யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.

#Exclusive ராயபுரம் தொகுதியின் செல்லப்பிள்ளை…. அடுத்த முதல்வர்  நீங்கள் தானா?

தமிழக அமைச்சர்களில் வட மாவட்டத்தை சேர்ந்த அமைச்சராக நீங்கள் மட்டுமே உள்ளீர்கள்? பெரும்பாலான வட மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர் பதவி மறுக்கப்படுகிறது என்பது உண்மையா?

வடமாவட்டத்தை சேர்ந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் இருக்கிறார். எந்த மாவட்டமும் புறக்கணிக்கப்படவில்லை. எல்லாவற்றிற்கும் நாங்கள் முக்கியத்துவம் அளிக்கிறோம். எல்லா சமூகத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து சமத்துவம் கொண்ட அரசாக அம்மாவின் அரசு உள்ளது. எனவே இந்த கேள்விக்கே இடமில்லை.

#Exclusive ராயபுரம் தொகுதியின் செல்லப்பிள்ளை…. அடுத்த முதல்வர்  நீங்கள் தானா?

ஊடகங்களுக்கு அதிமுகவின் முகமாக நீங்கள்தான் உள்ளீர்கள் ? அரசின் முக்கிய அறிவிப்புகளை நீங்களே ஊடகங்களுக்கு சொல்கிறீர்கள்? இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சர் ஜெயக்குமாரை நாங்கள் எப்போதாவது முதலமைச்சராக பார்க்க முடியுமா?

அதில் எந்த நோக்கமும் இல்லை. எங்களை பொறுத்தவரையில் அம்மாவின் அரசு அமைய வேண்டும். அது மட்டுமே எங்களின் ஒரே நோக்கம்.

திராவிட கட்சியை சேர்ந்தவர்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் உங்களுக்கு கோவிலிலிருந்து பிரசாதம் வருகிறது? உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதா?

இறைவனின் அருள் பெற்ற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட இயக்கம். பொதுவாகவே ஒன்றே குலம் ஒருவனே தேவன் . எங்கள் அண்ணா சொன்னதை தான் புரட்சித்தலைவர் பின்பற்றினார். புரட்சித்தலைவரின் குறிக்கோளை ஜெயலலிதா பின்பற்றினர். கடவுள் இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை; கடவுள் இருக்கிறார் . அதனால்தான் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று அண்ணா சொன்னார். மக்கள் சேவையே மகேசன் சேவை. மக்களுக்கு தொண்டாற்றுவது கடவுளுக்கு தொண்டு செய்வதற்கு சமம் என்றார்.