அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணம்! அவசர கதியில் அரங்கேறிய நாடகம்

 

அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணம்! அவசர கதியில் அரங்கேறிய நாடகம்

சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அதிரடியாக களமிறங்கிய அதிமுக, கடந்த மாதம் 24ஆம் தேதியிலிருந்து விருப்ப மனுக்களை பெற்றது. கடந்த புதன்கிழமையோடு விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் மொத்தமாக 8,240 பேர் விருப்ப மனுக்களை அளித்திருப்பதாக அதிமுக அறிவித்தது. இதையடுத்து, விருப்ப மனு அளித்த எல்லாருக்கும் ஒரே நாளில் நேர்காணல் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. திமுக உள்ளிட்ட கட்சிகள் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக நேர்காணல் நடத்தி வரும் நிலையில், ஒரே கட்ட நேர்காணல் எப்படி சாத்தியம் என்ற கேள்வி எழுந்தது. எதையும் முடித்துக் காட்டும் கட்சி அதிமுக, என்ற தொனியில் சசிகலாவின் அறிக்கை கொடுத்த ஊக்கத்தில் இதனையும் செய்து முடித்தது.

அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணம்! அவசர கதியில் அரங்கேறிய நாடகம்

இந்நிலையில் தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க வேட்பாளர்களுடனான நேர்காணல் மாலையே நிறைவடைந்ததாக தலைமை அறிவித்தது. கடைசியாக திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த 760 பேரை ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மற்றும் 5 நிர்வாகிகள் நேரில் சந்தித்து வழியனுப்பி வைத்தார்கள். ஆக இன்று ஒரே நாளில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை 8 ஆயிரத்து 300 பேரை பார்த்தார்கள் என அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளது.