பின்னடைவை சந்திக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்… பேரதிர்ச்சியில் ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

பின்னடைவை சந்திக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்… பேரதிர்ச்சியில் ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை 75 மையங்களில் இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், அமமுக என ஐந்து முனைப் போட்டி நிலவினாலும் திமுக – அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. தற்போதைய நிலவரத்தின் படி திமுக 130 இடங்களிலும் அதிமுக 102 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

பின்னடைவை சந்திக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்… பேரதிர்ச்சியில் ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

இந்த நிலையில், அதிமுகவின் முக்கிய புள்ளிகள் பலர் பின்னடைவை சந்திந்து வருவது அதிமுக தலைமையை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், நன்னிலம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் காமராஜ், ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஜெயக்குமார், ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ஆவடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

பின்னடைவை சந்திக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்… பேரதிர்ச்சியில் ஓபிஎஸ் – ஈபிஎஸ்!

இத்தகைய சூழலில் சற்றும் எதிர்பாராத விதமாக, போடி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் பின்னடைவை சந்திப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓபிஎஸ்ஸை எதிர்த்து போட்டியிட்ட தங்கத் தமிழ்செல்வன் முன்னிலையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.