“தமிழ்நாட்டில் மொட்டை மட்டும் தான் இலவசமாகக் கிடைக்கிறது” – ஜெயக்குமார் விமர்சனம்!!

 

“தமிழ்நாட்டில் மொட்டை மட்டும் தான் இலவசமாகக் கிடைக்கிறது” –  ஜெயக்குமார் விமர்சனம்!!

தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டில் மொட்டை மட்டும் தான் இலவசமாகக் கிடைக்கிறது” –  ஜெயக்குமார் விமர்சனம்!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளது. வருகின்ற செப்டம்பர் 15 தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் இன்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் பழனிக்குமார் இன்று ஆலோசனை நடத்தினார் .இதில் திமுக ,அதிமுக, மதிமுக, காங்கிரஸ் ,இந்திய கம்யூனிஸ்ட் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

“தமிழ்நாட்டில் மொட்டை மட்டும் தான் இலவசமாகக் கிடைக்கிறது” –  ஜெயக்குமார் விமர்சனம்!!

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, ” தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம் . பல குழப்பங்கள் இருப்பதால் ஊரக உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்துவார்கள் என்ற சந்தேகம் உள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேரத்தை குறைக்க அதிமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல், இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடத்துவதற்கு பதிலாக காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்த கோரிக்கை வைத்துள்ளோம். வாக்குப்பதிவு நடக்கும் மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்தவும் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றார்.தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் கோயில்களில் மொட்டை அடிப்பதற்கு கட்டணமில்லை என்பது குறித்த பதிலளித்த போது, தமிழகத்தில் இலவசமாக மொட்டை மட்டும் தான் அடிக்கப்படுகிறது என்று விமர்சித்தார்.