ரூ.1 கோடி பரிசுப்பொருட்களை பதுக்கிய அதிமுக… தட்டித் தூக்கிய திமுக!

 

ரூ.1 கோடி பரிசுப்பொருட்களை பதுக்கிய அதிமுக… தட்டித் தூக்கிய திமுக!

தமிழகத்தில் தேர்தல் குறித்தான அறிவிப்பை நேற்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா வெளியிட்டார். அதன்படி ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அறிவிப்பு வெளியான இரண்டு மணி நேரத்திற்குப் பின் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இவ்விதியின்படி பணப் பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் என எதையும் வாக்காளார்களுக்குக் கொடுக்கக் கூடாது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ஊட்டியில் அதிமுகவால் களேபரம் சிறப்பாகத் தொடங்கியது.

ரூ.1 கோடி பரிசுப்பொருட்களை பதுக்கிய அதிமுக… தட்டித் தூக்கிய திமுக!

அதிமுகவினர் பொதுமக்களுக்கு வேட்டி-சேலை, பரிசுப் பொருட்களை வழங்கினர். ஊட்டி நகராட்சி டம்ளர் முடக்கு பகுதியில் பரிசுப்பொருட்கள் வழங்கியபோது நகர செயலாளர் ஜார்ஜ் தலைமையில் திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சாலை மறியலும் நடத்தினர். இவ்விவகாரத்தின் சூடு தணியும் முன்பே வால்பாறையில் மற்றொரு சம்பவத்தை அதிமுகவினர் அரங்கேற்றியுள்ளனர்.

ரூ.1 கோடி பரிசுப்பொருட்களை பதுக்கிய அதிமுக… தட்டித் தூக்கிய திமுக!

வால்பாறையை அடுத்த பாறைமேட்டில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக ரூ.1 கோடி பரிசுப்பொருட்களை அதிமுகவினர் பதுக்கிவைத்துள்ளனர். இதனை எப்படியோ தெரிந்துகொண்ட திமுகவினர் அதிமுகவினரின் 3 வீடுகளில் பதுக்கி வைத்திருந்த பரிசுப்பொருட்களைக் கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் திமுகவினர் ஒப்படைத்தனர். முன்னதாக அறிவிப்புக்கு முன் கோவையில் யாருமே இல்லாத வீட்டின் கேட்டில் பரிசுப்பொருட்களை அதிமுகவினர் தொங்கவிட்டுச் சென்றதும் குறிப்பிடத்தக்கது.