‘பாஜகவை ஓரங்கட்டும் அதிமுக’.. இரட்டைத் தலைமை மீது கடுப்பில் மோடி?

 

‘பாஜகவை ஓரங்கட்டும் அதிமுக’.. இரட்டைத் தலைமை மீது கடுப்பில் மோடி?

தமிழகத்தில் காலூன்ற திட்டமிட்டிருக்கும் தேசிய கட்சியான பாஜக, அதிமுகவுடன் கைகோர்த்துள்ளது. அதிமுக பாஜகவுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கியது. அந்த தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்த பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. நடக்கவிருக்கும் தேர்தலில் கூட்டணி அமைந்திருந்தாலும் அதிமுக மற்றும் பாஜகவின் கொள்கை மற்றும் கோட்பாடுகள் வெவ்வேறானது. இது தேர்தல் அறிக்கையிலேயே அப்பட்டமாக தெரிய வந்தது.

‘பாஜகவை ஓரங்கட்டும் அதிமுக’.. இரட்டைத் தலைமை மீது கடுப்பில் மோடி?

அதுமட்டுமில்லாமல் அதிமுகவின் பிரச்சாரக் கூட்டங்களில் பாஜகவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை. பிரச்சாரத்துக்காக வைக்கப்படும் பேனர்களில் பாஜக தலைவர்களின் போட்டோக்கள் போடப்படுவதில்லை. போனால் போகிறது என்பது போல ஆங்காங்கே ஒரு கொடியை மட்டும் வைக்கிறார்கள். பாஜகவினரையும் பிரச்சாரத்தில் சேர்த்துக் கொள்வதில்லை. இது பாஜகவினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

‘பாஜகவை ஓரங்கட்டும் அதிமுக’.. இரட்டைத் தலைமை மீது கடுப்பில் மோடி?

தமிழக மக்கள் பாஜகவின் திட்டங்களுக்கு எதிரானவர்கள். அந்த கட்சியுடன் அதிமுக கூட்டணி அமைத்திருப்பதால், வாக்குகள் சிதறுமோ என்ற அச்சமே மேற்கண்ட செயல்களுக்கு காரணமென பரபரப்பாக பேசப்படுகிறது. இவ்வாறு பாஜகவை அதிமுக ஓரங்கட்டுவது டெல்லி வரையில் எதிரொலித்திருக்கிறதாம். இதனாலேயே மோடி, அதிமுக வேட்பாளர்களை ஆதரிக்காமல் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்களில் மட்டும் பிரச்சாரம் செய்யப் போவதாக கூறப்படுகிறது.

தொகுதி பங்கீடு முடிந்ததும் அதிமுக தனது வேலையைக் காட்டுவது பாஜகவினரை கடுப்பாக்கியிருக்கும் நிலையில், தேர்தல் முடிந்ததும் பதிலடி கொடுக்க பாஜகவினர் காத்திருப்பதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.