அதிமுக, திமுக கைவிரிப்பு – திண்டாட்டத்தில் இதர கட்சிகள்

 

அதிமுக, திமுக கைவிரிப்பு – திண்டாட்டத்தில் இதர கட்சிகள்



வழக்கமாக தேர்தல் காலம் நெருங்கும் போது மிகப் பெரிய கட்சிகள், தங்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள விரும்புவர்களை அழைத்து பேசுவார்கள். கூடுதலோ, குறைவோ..? ஒரு சில தொகுதிகளை விட்டுக் கொடுத்து கூட்டணி முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும். ஆனால் இந்த முறை அப்படியில்லை. தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் குழப்பங்கள் நிலவி வருகின்றன.

அதிமுக, திமுக கைவிரிப்பு – திண்டாட்டத்தில் இதர கட்சிகள்

அதிமுகவை பொறுத்தவரை கூட்டணியே வேண்டாம் என்ற முடிவில் இருப்பதாகத் தெரிகிறது.எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என அதிமுக ஒருசேர முடிவெடுத்த நிலையில் மக்கள் மத்தியில் அதிமுகவிற்கு நல்ல பெயர் இருப்பதாக உளவுத்துறை அறிக்கையும் தரப்பட்டிருக்கிறதாம்.அதிமுகவை பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்தே பலமுறை தனித்து களம் கண்டு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது என்பது கடந்த கால நிதர்சனம்.
இந்த நிலையில் தங்களுக்கு 60 இடங்கள் வேண்டும் என பாஜக கேட்டதுடன் சமீப காலமாக அதிமுகவுடன் முன்னுக்கு பின் முரணாகவும் நடந்து வருகிறது. பாஜகவிற்கு எந்த சூழ்நிலையிலும் 60 இடங்களைத் தர அதிமுக தயாராக இல்லை.இதே போல் அன்பு மணிக்கு துணை முதல்வர் பதவி கேட்பதால் பாமகவுடனும் கூட்டணி வைக்க அதிமுக தயாராக இல்லை. ஒட்டு மொத்தத்தில் தனித்து நிற்பதில் மிக “தில்”லாக இருக்கிறது அதிமுக.

அதிமுக, திமுக கைவிரிப்பு – திண்டாட்டத்தில் இதர கட்சிகள்


திமுகவை பொறுத்தவரை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடவேண்டும் என்ற உத்தரவில் விடுதலை சிறுத்தைகளுக்கும்,. மதிமுகவிற்கும் உடன்பாடு இல்லை.பீகார் தேர்தல் முடிவையடுத்து காங்கிரசுக்கு குறைந்த தொகுதிகள் மட்டுமே தந்தால் போதுமானது என்ற திமுகவின் முடிவால் தமிழக காங்கிரஸ் அதிர்ந்து போய் உள்ளது. காங்கிரசுக்கு திமுகவை விட்டால் வேறு வழியில்லை.
தமிழகத்தில் அதிமுக, திமுகவைத் தவிர பாஜக. காங்கிரஸ். பா.ம.க. தே.மு.தி.க த.மா.க, கம்யூனிஸ்டுகள். ம.தி.மு.க,, சீமானின் நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள். புதிய தமிழகம், கமலஹாசனின் மக்கள் நீதி மைய்யம், முஸ்லீம் லீக் என ஏராளமான கட்சிகள் இருக்கின்றன. இவர்களுக்கும் குறிப்பிட்ட சதவீத வாக்கு வங்கிகள் இருக்கின்றன.. ஆனாலும் இவர்களால் தனித்து போட்டியிட முடியாத சூழலும் உள்ளது.

அதிமுக, திமுக கைவிரிப்பு – திண்டாட்டத்தில் இதர கட்சிகள்


அதிமுக, திமுக இல்லாமல் மூன்றாவது கூட்டணி அமைப்பதிலும் இவர்களுக்குள் ஏராளமான சிக்கல்கள் உள்ளன. இதரக் கட்சிளிடையே கொள்கை முரண்பாடுகள் ஒருபக்கம்..புதிய கூட்டணி அமைத்தால் அதற்கு யார் தலைமை தாங்குவது?யார் முதல்வர் வேட்பாளர்? அப்படியே கூட்டணி வைத்தாலும் ஆட்சியைப் பிடிக்க முடியுமா என்பதெல்லாம் இன்னொரு பக்கமுள்ள விடை தெரியாத கேள்விகள்.ஆக மொத்தத்தில் அதிமுக, திமுக முடிவால் இதர கட்சியினர் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்..