அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டு; சட்டப்பேரவையில் கொதித்தெழுந்த அதிமுக எம்எல்ஏக்கள்!

 

அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டு; சட்டப்பேரவையில் கொதித்தெழுந்த அதிமுக எம்எல்ஏக்கள்!

சட்டப்பேரவையில் அதிமுக – திமுக எம்.எல்.ஏக்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் இன்றைய தினம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை, வணிகவரி பதிவு துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று காலை அமைச்சர் சி.வி கணேசன், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் திருத்த சட்ட முன் வடிவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இருக்கை வசதி கட்டாயம் என்பதை அவர் சட்டப்பேரவையில் முன்மொழிந்தார். இதையடுத்து துறை ரீதியான பல்வேறு அறிவிப்புகள் பேரவையில் வெளியிடப்பட்டன.

அமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டு; சட்டப்பேரவையில் கொதித்தெழுந்த அதிமுக எம்எல்ஏக்கள்!

கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மானிய கோரிக்கை விவாதத்தின் போது பேசிய அமைச்சர் காந்தி, கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் எந்த ஊருக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அமைச்சர் காந்தியின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். கடந்த கால ஆட்சி பற்றி அமைச்சர் காந்தி ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அதிமுக எம்எல்ஏ முனுசாமி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் அதிகரித்ததால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.