‘மொழி திணிப்பை ஏற்க முடியாது’ செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

 

‘மொழி திணிப்பை ஏற்க முடியாது’ செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

அதிமுக செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் தொடரும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழகத்தில் இந்தி திணிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது என்பது அனைவரும் அறிந்தவையே. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கும் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது இந்தி திணிப்பினால் தான். புதிய கல்விக் கொள்கை வலியுறுத்தும் மும்மொழி கொள்கைக்கு, தமிழக அரசு ஒரு போதும் அனுமதி அளிக்காது என முதல்வர் பழனிசாமி ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதற்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரவேற்பு அளித்தன.

‘மொழி திணிப்பை ஏற்க முடியாது’ செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்று வரும் அதிமுக செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தில் இருமொழி கொள்கையே தொடரும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. மத்திய அரசு கொரோனா நிவாரணத்திற்கு நிதி வழங்க வேண்டும், ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளை தர வேண்டும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும், இலங்கைத் தமிழர் நலன் காக்கப்பட வேண்டும் என்பவை உள்ளிட்ட 15 தீர்மானங்கள் அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்தி திணிப்புக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்திருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

‘மொழி திணிப்பை ஏற்க முடியாது’ செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

அதாவது தாய்மொழி தமிழ், உலகத்தோடு உறவாட ஆங்கிலம் ஆகிய இருமொழி கொள்கையே தொடரும் என்றும் எந்த மொழிக்கும் அதிமுக எதிரானது அல்ல, எந்த மொழியையும் எம்மீது திணிக்கப்படுவதை ஏற்க முடியாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய பாஜக அரசுடன் கூட்டணியில் இருக்கும் அதிமுக அரசு, இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.