‘ராகுல்காந்தி மீது போக்சோவில் நடவடிக்கை’ எடுக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

 

‘ராகுல்காந்தி மீது போக்சோவில் நடவடிக்கை’ எடுக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது போக்சோ வழக்கில் நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

டெல்லியில் பட்டியலினத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதனை காங்கிரஸ் கட்சியினர் செய்தனர். இது சர்ச்சையைக் கிளப்பியது.

‘ராகுல்காந்தி மீது போக்சோவில் நடவடிக்கை’ எடுக்கக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்களை பொதுவெளியில் பகிர்வது குற்றம் என்பதால் ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கை முடக்க குழந்தைகள் நல ஆணையம் ட்விட்டருக்கு கோரிக்கை விடுத்தது. அதன் படி ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. இது தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் ராகுல் காந்தி மீது பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. அந்த மனு இன்று மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி செப்டம்பர் 3ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.