அதிமுக தேர்தல் பணி: அமைச்சர் கே.சி வீரமணிக்கு கூடுதல் பொறுப்பு!

 

அதிமுக தேர்தல் பணி: அமைச்சர் கே.சி வீரமணிக்கு கூடுதல் பொறுப்பு!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் தேர்தல் பணியில் அதிரடியாக களமிறங்கிவிட்டன. இதற்கான பணிகள் கொரோனா பொதுமுடக்கத்தின் போதே தொடக்கிவிட்டது. இந்த முறை தேர்தல் முன்கூட்டியே நடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மாவட்டம் மாவட்டமாக சுற்றுப்பயணம் சென்று முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரித்து வருகிறார்.

அதிமுக தேர்தல் பணி: அமைச்சர் கே.சி வீரமணிக்கு கூடுதல் பொறுப்பு!

இதனிடையே, சட்டமன்றத் தேர்தலுக்கான பொறுப்பாளர்களை நியமித்து கடந்த ஜூலை மாதம் அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டது. அதில், அமைச்சர் கே.சி.வீரமணி திருப்பத்தூர் மாவட்ட மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அமைச்சர் கே.சி.வீரமணி ராணிப்பேட்டை மாவட்டத்தையும் கூடுதலாக கவனிப்பார் என ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், “சட்டமன்ற பொதுத்தேர்தல் பணிகளையும், கழக பணிகளையும் விரைவுபடுத்தும் வகையில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மண்டல பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கே. சி வீரமணி ராணிப்பேட்டை மாவட்டத்தையும் கூடுதலாக கவனிப்பார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.