லாக்டவுனால் அதானி பவர் நிறுவனத்தின் நஷ்டம் எகிறியது..

 

லாக்டவுனால் அதானி பவர் நிறுவனத்தின் நஷ்டம் எகிறியது..

இந்தியாவின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான கவுதம் அதானிக்கு சொந்தமான நிறுவனங்களில் ஒன்று அதானி பவர். இந்நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் ரூ.682.46 கோடியை நிகர நஷ்டமாக சந்தித்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் அதிகமாகும். 2019 ஜூன் அதானி பவர் நிறுவனத்துக்கு ரூ.263.39 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது.

லாக்டவுனால் அதானி பவர் நிறுவனத்தின் நஷ்டம் எகிறியது..

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு தழுவிய லாக்டவுனை அமல்படுத்தியதால் நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் மின்சார தேவை குறைந்தது. இதனையடுத்து வருவாய் குறைந்ததால் அதானி பவர் நிறுவனத்தின் நஷ்டம் அதிகரித்தது.

லாக்டவுனால் அதானி பவர் நிறுவனத்தின் நஷ்டம் எகிறியது..

2020 ஜூன் காலாண்டில் அதானி பவர் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.5,356.19 கோடியாக குறைந்தது. 2019 ஜூன் காலாண்டில் அதானி பவர் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.8,014.50 கோடியாக இருந்தது. சென்ற நிதியாண்டில் (2019-20) அதானி பவர் நிறுவனத்தக்கு ஒட்டு மொத்த அளவில் ரூ.2,274.77 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. மேலும் அந்த நிதியாண்டில் அதானி பவர் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.27,841.81 கோடியாக இருந்தது.