அதானி போர்ட்ஸ் லாபம் 285 சதவீதம் அதிகரிப்பு.. பங்கு ஒன்றுக்கு டிவிடெண்ட் ரூ.5 பரிந்துரை

 

அதானி போர்ட்ஸ் லாபம் 285 சதவீதம் அதிகரிப்பு.. பங்கு ஒன்றுக்கு டிவிடெண்ட் ரூ.5 பரிந்துரை

2021 மார்ச் காலாண்டில் அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்னாமிக் சோன் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.1,287.81 கோடி ஈட்டியுள்ளது.

நம் நாட்டின் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவரான கவுதம் அதானிக்கு சொந்தமான அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்னாமிக் சோன் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2021 மார்ச் காலாண்டில் அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்னாமிக் சோன் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.1,287.81 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 285.1 சதவீதம் அதிகமாகும்.

அதானி போர்ட்ஸ் லாபம் 285 சதவீதம் அதிகரிப்பு.. பங்கு ஒன்றுக்கு டிவிடெண்ட் ரூ.5 பரிந்துரை
துறைமுகம்

2021 மார்ச் காலாண்டில் அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.3,608 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 23.5 சதவீதம் அதிகமாகும். சரக்கு அளவு மற்றும் வருவாய் அதிகரித்ததே இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் அதிகரிப்பு முக்கிய காரணம்.

அதானி போர்ட்ஸ் லாபம் 285 சதவீதம் அதிகரிப்பு.. பங்கு ஒன்றுக்கு டிவிடெண்ட் ரூ.5 பரிந்துரை
அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்னாமிக் சோன்

அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 2020-21ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.5 டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது அதானி போர்ட்ஸ் அண்டு ஸ்பெஷல் எக்னாமிக் சோன் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.98 சதவீதம் சரிந்து ரூ.738.20 ஆக குறைந்தது.