வருவாய் கொட்டியதால் ஹேப்பி…. அதானி கிரீன் எனர்ஜி லாபம் ரூ.22 கோடி

 

வருவாய் கொட்டியதால் ஹேப்பி…. அதானி கிரீன் எனர்ஜி லாபம் ரூ.22 கோடி

2020 ஜூன் காலாண்டில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.21.75 கோடி ஈட்டியுள்ளது.

நம் நாட்டின் மெகா கோடீஸ்வரர்களில் ஒருவரான கவுதம் அதானிக்கு சொந்தமான நிறுவனம் அதானி கிரீன் எனர்ஜி. அந்நிறுவனம் கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.21.75 கோடி ஈட்டியுள்ளது. 2019 ஜூன் காலாண்டில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் ரூ.97.44 கோடியை நிகர இழப்பாக சந்தித்து இருந்தது.

வருவாய் கொட்டியதால் ஹேப்பி…. அதானி கிரீன் எனர்ஜி லாபம் ரூ.22 கோடி
கவுதம் அதானி

2020 ஜூன் காலாண்டில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.878.14 கோடியாக உயர்ந்துள்ளது. 2019 ஜூன் காலாண்டில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் ரூ.675.23 கோடியை மொத்த வருவாயாக ஈட்டியிருந்தது. கடந்த காலாண்டில் வருவாய் அதிகரித்ததே அந்நிறுவனம் லாபம் ஈட்டியதற்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

வருவாய் கொட்டியதால் ஹேப்பி…. அதானி கிரீன் எனர்ஜி லாபம் ரூ.22 கோடி
மரபுசார எரிசக்தி

அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அல்லது மரபுசார எரிசக்தி வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்நிறுவனம் கடந்த காலாண்டில் 138.20 கோடி யூனிட் மின்சாரத்தை விற்பனை செய்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 24 சதவீதம் அதிகமாகும்.