‘குதிரை லாட வடிவில்’ உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதை திறப்பு!

‘குதிரை லாட வடிவில்’ உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதை திறப்பு!

மணாலியில் ரூ.4,000 கோடி செலவில் அமைக்கப்பட்டிருக்கும் அடல் சுரங்கப்பாதையை பிரதமர் திறந்து வைத்தார்.

இமாச்சல பிரதேசம், மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்குக்கு செல்லும் சாலை ஆண்டுதோறும் கடும் பனிச்சரிவில் மூடப்பட்டுவிடும் என்பதால், சுமார் 6 மாதத்திற்கு அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்படும். அதனால் இப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க அரசு முடிவெடுத்த நிலையில், வாஜ்பாய் நினைவாக ‘அடல் சுரங்கப்பாதை’ என இதற்கு பெயர்சூட்டப்பட்டது.

‘குதிரை லாட வடிவில்’ உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதை திறப்பு!

இந்த சுரங்கப்பாதையின் கட்டுமான பணிகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில், இன்று பிரதமர் மோடி அடல் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார். தொடர்ந்து, சிஸ்சு மற்றும் சோலங்கி பள்ளத்தாக்கில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றவிருக்கிறார். இனி இந்த சுரங்கப்பாதையின் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

‘குதிரை லாட வடிவில்’ உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதை திறப்பு!

உலகிலேயே மிக நீளமான சுரங்கப்பாதையான அடல், சுமார் 9.02கி.மீ தூரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் இனிமேல் லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்குக்கு செல்ல மழை, பணி என எந்த வானிலையும் தடையாக இருக்காது. இந்த சுரங்கப்பாதையில் பயணிப்பதன் மூலம், சுமார் 46 கி.மீ பயண தூரம் குறைவதோடு 5 மணி நேரம் வரையில் பயண நேரமும் குறைகிறதாம்.

‘குதிரை லாட வடிவில்’ உலகின் மிக நீளமான அடல் சுரங்கப்பாதை திறப்பு!

அதே போல, கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் மீ உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த சுரங்கப்பாதை அதிநவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், நாள் ஒன்றுக்கு 3,000 கார்கள் மற்றும் 1,500 லாரிகள் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் பயணிக்கும் வகையில் அடல் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது.