தமிழக காங்கிரஸின் மனித உரிமை துறையில் நடிகை ஷகிலாவுக்கு முக்கிய பதவி

 

தமிழக காங்கிரஸின் மனித உரிமை  துறையில் நடிகை ஷகிலாவுக்கு முக்கிய பதவி

சென்னையில் பிறந்து வளர்ந்தாலும் மலையாளத்தில் கொடிக்கட்டி பறந்தவர் ஷகிலா. 90களில் இவர் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் மம்முட்டி, மோகன்லால் படங்களையே வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்துவிடுவார்களாம். அதுவே இவருக்கு ஆபத்தாகி போனது. முதலில் கவர்ச்சி வேடங்களில் நடித்துவந்த இவர், காலப்போக்கில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார். தற்போது தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், யூடியூப் சேனல்களில் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவருகிறார்.

தமிழக காங்கிரஸின் மனித உரிமை  துறையில் நடிகை ஷகிலாவுக்கு முக்கிய பதவி

இந்நிலையில் நடிகை சகிலா தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் சேர்ந்துள்ளார். அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையில் மாநில பொதுச்செயலாளர் வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் இன்று பதவி ஏற்றார்