தனக்கு பாஜக அழுத்தம் கொடுத்ததா என்பது குறித்து ரஜினிதான் பதிலளிக்க வேண்டும்: குஷ்பு

 

தனக்கு பாஜக அழுத்தம் கொடுத்ததா என்பது குறித்து ரஜினிதான் பதிலளிக்க வேண்டும்: குஷ்பு

புதுக்கோட்டை திலகர் திடலில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, “முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை பாஜக ஏற்கவில்லை என்று யாரும் கூறவில்லை, தேசிய ஜனநாயக கூட்டணியின் கொள்கை விதியின் படி அதன் தலைமை தான் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்கும், பொங்கலுக்குப் பிறகு மாற்றம் வரும், கூட்டணியை முடிவு செய்தபிறகு அதை தெரிவிப்பார்கள், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகள் எந்த கட்சியாக இருந்தாலும் கட்சியை சார்ந்தவர்கள் இல்லை என்றாலும் உடனடியாக அவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்களை விட்டு வைக்கக் கூடாது.

ரஜினிக்கு அழுத்தம் கொடுத்தது மன உளைச்சலுக்கு ஆளாக்கியது பாஜக தான் என்று மற்றவர்கள் கூறக் கூடாது, அதற்கு ரஜினி தான் பதிலளிக்க வேண்டும், ரஜினி அரசியலுக்கு வராதது அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். பாஜக தமிழகத்தில் வளர்ந்துவருகிறது, ஒவ்வொரு தெருக்களிலும் பாஜக உள்ளது, சட்டமன்ற தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும். நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை முடிவு செய்யும், ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட தயார்.

தனக்கு பாஜக அழுத்தம் கொடுத்ததா என்பது குறித்து ரஜினிதான் பதிலளிக்க வேண்டும்: குஷ்பு

கருணாநிதியின் குடும்பத்தில் இருந்து வந்த உதயநிதி பெண்கள் குறித்து இழிவாக பேசியது கேவலமானது. கமல் அறிவித்த பெண்களுக்கான அறிவிப்பை நான் வரவேற்கிறேன். திரையரங்குகளில் 50சதவித அனுமதி என்பதில் அரசுக்கு எதிராக ரசிகர்கள் பேசதான் செய்வார்கள். விதிகளின்படிதான் திரையரங்குகளில் 50சதவித இடங்களுக்கான அனுமதி வழங்கப்படும். எதிர்கட்சிகள் பெண்களின் பாதுகாப்பு பற்றியோ ஊழல் பற்றியோ பேச அருகதையில்லை. திமுகவில் நான் இருந்தபோது எனது வீட்டில் கல் எறிந்தது குறித்து பேச முயன்றபோது கண்டுகொள்ளாத ஸ்டாலின் தமிழகத்தை எப்படி காப்பாற்றுவார் .பெண்களுக்கு இந்த தேர்தலில் அதிக வாய்ப்புகள் தரப்படும் என மோடி அறிவித்துள்ளார். திருமாவளவன் பிரபலமடைய வேண்டுமென எதாவது சர்ச்சையாக பேசிவருகிறார்” எனக் கூறினார்.