எதுக்கு இப்படி கேட்குறீங்க…நான் தான் உங்க ஈஸி டார்கெட்டா? குஷ்பு ஆவேசம்!!

 

எதுக்கு இப்படி கேட்குறீங்க…நான் தான் உங்க ஈஸி டார்கெட்டா?  குஷ்பு ஆவேசம்!!

கு.க. செல்வம் வாய்ப்பை நான் தட்டி பறிக்கவில்லை என்று நடிகையும் பாஜக வேட்பாளருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

எதுக்கு இப்படி கேட்குறீங்க…நான் தான் உங்க ஈஸி டார்கெட்டா?  குஷ்பு ஆவேசம்!!

இந்நிலையில் சமீபத்தில் ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு பேசும் போது, “ஆயிரம் விளக்கு தொகுதியில் கு.க. செல்வத்தின் வாய்ப்பை நான் தட்டி பறிக்கவில்லை. நான் டெல்லி வரை சென்று வாய்ப்பை பெறக்கூடியவள் என்றால், நான் இங்கு இருக்க மாட்டேன். இந்நேரம் டெல்லியில் இருந்து இருப்பேன். எனக்கு சீட் கொடுப்பார்கள் என்று எனக்கே தெரியாது.இதுவே வேறு யாருக்கு சீட்டு கிடைத்திருந்தாலும் நீங்கள் டெல்லி போய் சீட்டு வாங்கி கொண்டு வந்தீர்களா என்று கேட்பீர்களா? ஏன் எனக்கு மட்டும் இதுபோன்ற பேச்சுக்கள் வருகிறது என்று தெரியவில்லை. ஒரு பெண் என்பதால் நான் ஈஸி டார்கெட்டாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன்” என்றார்.

எதுக்கு இப்படி கேட்குறீங்க…நான் தான் உங்க ஈஸி டார்கெட்டா?  குஷ்பு ஆவேசம்!!

தொடர்ந்து பேசிய அவர், கமல் அதிகளவு திமுகவை விமர்சித்து வருகிறார். தவறு எங்கு நடக்கிறதோ அங்கு இருப்பவர்களை தான் விமர்சிக்க முடியும்? கமல் பாஜகவின் பி டீம் என்று சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.தவறை மறைக்க திமுக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது என்று கூறிய அவர், நான் அடிப்படையில் பெரியாரிஸ்ட் ஆக இருக்கிறேன் . அதனால் ஒரு மதத்தை தாக்கி பேச வேண்டும் என்பது இல்லை. மதம் என்பது அவரவரின் தனிப்பட்ட கருத்து. நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஒரு மதத்தை தாக்கி கொச்சைப்படுத்தி பேசக்கூடாது என்பதை நான் முற்றிலுமாக நம்புகிறேன்” என்றார்.