புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தவசிக்கு விஜய் சேதுபதி ஒரு லட்சம் நிதியுதவி!

 

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தவசிக்கு விஜய் சேதுபதி ஒரு லட்சம் நிதியுதவி!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசிக்கு, நடிகர் விஜய்சேதுபதி ரூ.ஒரு லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

காமெடி நடிகர் தவசி, இவர் அழகர் சாமியின் குதிரை, நான் கடவுள், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, வீரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனது மீசையால் குறுகிய காலத்தில் பிரபலமான தவசி சமீபத்தில் காலில் அடிபட்டு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். இதை தொடர்ந்து நலமுடன் வீடு திரும்பிய அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது நடிகர் தவசிக்கு உணவுக்குழாய் புற்றுநோய் ஏற்பட்டது. ஏற்கனவே வறுமையில் வாடி வந்த அவர் புற்றுநோயால் உடல் மெலிந்து பரிதாபமாக இருக்கிறார். இவருக்கு நடிகர் சூரி ரூ. 20 ஆயிரம் நிதியுதவி அளித்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் தவசிக்கு விஜய் சேதுபதி ஒரு லட்சம் நிதியுதவி!

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் தவசிக்கு விஜய் சேதுபதி ஒரு இலட்சமும் நடிகரும் சமூக ஆர்வலருமான சுந்தரபாண்டியன் சௌந்தரராஜா 10 ஆயிரம் ரூபாயும் வழங்கினர். அதுமட்டுமின்றி தொடர்ந்து சினிமா துறையினரும் தன்னார்வளர்களும் தவசிக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்