நடிகர் சுஷாந்த் சிங் மரணம்… சி.பி.ஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை!

 

நடிகர் சுஷாந்த் சிங் மரணம்… சி.பி.ஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை!

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளது என்று ஐக்கிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் மரணம்… சி.பி.ஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை!
பீகாரைச் சேர்ந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டார். மும்பை போலீஸ் இந்த வழக்கை சரியான முறையில் விசாரிக்கவில்லை என்று அவரது தந்தை குற்றம்சாட்டினார். மேலும் வாரிசு நடிகர்கள் சிலர்தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதனால் பீகாரில் இந்த தற்கொலை தொடர்பாக தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நடிகர் சுஷாந்த் சிங் மரணம்… சி.பி.ஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை!
பீகார் போலீசாரின் விசாரணைக்கு மும்பை போலீசார் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், மும்பை போலீஸ் இந்த விஷயத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்று பா.ஜ.க குற்றம்சாட்டி வருகிறது. பீகாரில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் இதை அம்மாநில அரசியல் கட்சிகள் பயன்படுத்த ஆரம்பித்தன.

நடிகர் சுஷாந்த் சிங் மரணம்… சி.பி.ஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை!
சுஷாந்த் வழக்கை சி.பி.ஐ-யிடம் மகாராஷ்டிரா போலீஸ் ஒப்படைக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் பீகார் மாநில அரசு இந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவலை பீகாரில் ஆட்சி செய்யும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் நிருபர்களிடம் தெரிவித்தார். சம்பவம் நடந்தது மும்பையில். இதனால் மகாராஷ்டிர அரசின் பரிந்துரையின்றி இந்த வழக்கு சி.பி.ஐ-க்கு மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே கொல்கத்தாவில் சி.பி.ஐ சந்தித்த அவமானங்கள் அதிகம். அது போன்ற நிலை மும்பையில் வந்துவிடாமல் சமூகமாக தீர்க்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.