தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

 

தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த சூர்யா!

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 7.5% உள்ஒதுக்கீடு மசோதாவை முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்தார்.

NEET தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சிபெறும் அரசு பள்ளியில் படித்த தகுதியான மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் தாக்கல் செய்தார். மருத்துவம், பல், இந்திய மருத்துவம், ஓமியோபதி இளங்கலை படிப்புகளில் முன்னுரிமை தர உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு உள்ஒதுக்கீடு தரப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். மாணவர்களுக்கு துணை நிற்போம்… ஒன்றிணைந்து செயல்படுவோம்…” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, நீட் தேர்வுக்கு எதிராக நடிகர் சூர்யா கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார். ஏழை எளிய மக்களின் நிதர்சனம் அறியாதவர்கள் கல்விக் கொள்கைகளை வகுக்கிறார்கள் என்று ஆவேசமாக கூறியிருந்தார். சூர்யாவின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வந்தது