உஷார் மக்களே! ஆரோக்கிய சேதுவை ஏன் பயன்படுத்த சொன்னாங்கன்னு இப்ப புரியுதா?

 

உஷார் மக்களே! ஆரோக்கிய சேதுவை ஏன் பயன்படுத்த சொன்னாங்கன்னு இப்ப புரியுதா?

எதிர்கட்சிகளை சேர்ந்த அமைச்சர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் போன் ஒட்டுக்கேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து நாடாளுமன்றத்தின் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர்.

உஷார் மக்களே! ஆரோக்கிய சேதுவை ஏன் பயன்படுத்த சொன்னாங்கன்னு இப்ப புரியுதா?

இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ”மத்திய அரசு பெகாசஸ் ஸ்பைவேர் கொண்டு யாரையும், உளவு பார்க்கவில்லை. பெகாசஸ் பயன்படுத்தும் நாடுகள் என்று கூறப்படும் பட்டியலும் தவறானது. லீக்கான எண்கள் பயன்படுத்தப்பட்ட மொபைல் ஃபோனை தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தாமல் பெகாசஸ் மூலம் உளவு பார்க்கப்பட்டது என உறுதி செய்ய முடியாது” எனக் கூறினார்.

இந்நிலையில் நடிகர் சித்தார்த், “ஆரோக்கிய சேது போன்ற நம்பிக்கையற்ற செயலிகளை பயன்படுத்த மத்திய அரசு ஏன் வற்புறுத்தியது என புரிகிறதா? அவர்கள் பொய் சொல்கிறார்கள். அவர்கள் உளவு பார்க்கிறார்கள்.
ஏன் என்று கேட்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்,
விரைவில் அவர்கள் விடைபெற்றுவிடுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.