நவம்பரில் கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த் : கராத்தே தியாகராஜன் தகவல்!

 

நவம்பரில் கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த் : கராத்தே தியாகராஜன் தகவல்!

2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் எங்கள் இலக்கு என்று அறிவித்த ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முன்னதாக ரஜினி மக்கள் மன்றத்தை தொடங்கிய ரஜினி அதற்கான நிர்வாகிகளையும் நியமித்தார்.

நவம்பரில் கட்சி தொடங்குகிறார் நடிகர் ரஜினிகாந்த் : கராத்தே தியாகராஜன் தகவல்!

ரஜினி விரைவில் கட்சித்தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் ரஜினி தலைமையில் கடந்த மார்ச் மாதம் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது பேசும் பொருளானது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நவம்பரில் கட்சி தொடங்குவார் என்று ரஜினியின் அபிமானி கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். கொரோனாவால் ரஜினியின் கட்சி உதயம் ஆகஸ்ட்டுக்கு பதில் நவம்பருக்கு தள்ளிபோனதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.