ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

 

ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மு.க. ஸ்டாலினுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு 234 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில் திமுக கூட்டணி 157 இடங்களிலும், அதிமுக கூட்டணி 77 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. கிட்டத்தட்ட வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. திமுக வேட்பாளர் ஸ்டாலின் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய புள்ளிகள் வெற்றி பெற்றுள்ளனர். அதே சமயம் அதிமுக அமைச்சர்களில் அமைச்சர் ஜெயக்குமார் ,சி.வி. சண்முகம், எம். சி. சம்பத், பெஞ்சமின், பாண்டியராஜன், எம்.ஆர். விஜயபாஸ்கர், சரோஜா ஆகியோர் தோல்வியை சந்தித்துள்ளனர்.

ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் கடும் போட்டியில் திறம்பட அயராது உழைத்து வெற்றி அடைந்திருக்கும் என்னுடைய அன்பு நண்பர் மதிப்பிற்குரிய மு. க.ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், ஆரோக்கியத்துடனும், இருந்து அனைத்து தரப்பு மக்களும் திருப்தியடையும் வகையில் ஆட்சி செய்து, தமிழகத்தை வளமான மாநிலமாக மாற்றி பெரும் பேரும் புகழும் பெற வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.