‘நடிகர் ராஜசேகருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை’ : மருத்துவமனை தகவல்!

 

‘நடிகர் ராஜசேகருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை’ : மருத்துவமனை தகவல்!

நடிகர் ராஜசேகர் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

‘நடிகர் ராஜசேகருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை’ : மருத்துவமனை தகவல்!

தெலுங்கு நடிகர் ராஜசேகர் மற்றும் அவரது குடும்பத்தினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதில் அவரது மனைவி ஜீவிதா, மகள்கள் ஷிவானி, ஷிவாத்மிகா ஆகியோர் கொரோனாவிலிருந்த் மீண்டுள்ள நிலையில் ராஜசேகர் உடல்நிலை மோசமாக உள்ளது செய்திகள் வெளியாகின. இதை தொடர்ந்து அவரது மகள் ஷிவாத்மிகா, தனது கொரோனாவுடன் தீவிரமாக போராடி வருகிறார். அவருக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.

‘நடிகர் ராஜசேகருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை’ : மருத்துவமனை தகவல்!

இந்நிலையில் நடிகர் ராஜசேகர் உடல்நிலை குறித்த அவர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகர் ராஜசேகர் கொரோனா தொற்று காரணமாக , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராகவும், சிகிச்சைக்கு ஒத்துழைப்பும் அளிக்கிறது. தொடர்ந்து அவர் மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ராஜசேகர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப அவரது ரசிகர்களும், திரையுலகை சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது