கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகர் டிஸ்சார்ஜ்!

புதுமைப்பெண், புதிய தீர்ப்புகள், மீசைக்காரன், உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ராஜசேகர். இவரது மனைவி நடிகை ஜீவிதா. தெலுங்கில் முன்னணி  நடிகராக வலம்வந்து கொண்டிருக்கும் ராஜசேகர், அவரது மனைவி மற்றும் இரு மகள்களுக்கு கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, சிகிச்சைக்கு பின் மகள்கள் இருவரும் பூரண நலம் பெற்று வீடு திரும்பினர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த பிரபல தெலுங்கு நடிகர் ராஜசேகர் டிஸ்சார்ஜ்!

நாளடைவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ராஜசேகரின் உடல் நிலை மிகவும் மோசமானதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஐதராபாத்தில் உள்ள சிட்டி நியூரோ சென்டரில் வெண்டிலேட்டர் சப்போர்ட் உடன் ஐசியூவில் ராஜசேகருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. மேலும் அங்கு அவருக்கு பிளாஸ்மா தெரபி மற்றும் CYTOSORB தெரபி ஆகியவை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்த ராஜசேகர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் பூரண நலமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.