நடிகர் தேவை… விருப்பமுள்ளவர்கள் அணுகவும்: நடிகர் பார்த்திபன் ட்வீட்

 

நடிகர் தேவை… விருப்பமுள்ளவர்கள் அணுகவும்: நடிகர் பார்த்திபன் ட்வீட்

இயக்குநரும்  நடிகருமான பார்த்திபன் பேசுவதும் சரி அவர் எடுக்கும் படங்களும் சரி எப்போதும்  சற்று வித்தியாசப்பட்டிருக்கும். இவரது சமீபத்திய படைப்பு ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதை அமைத்து இந்த படத்தை பார்த்திபன் இயக்கியிருந்தார். இப்படத்தைக் கண்ட அனைவரும் இந்திய சினிமாவில் இதுவரை எவரும் கையாளாத பெரும் முயற்சி இது என்று பாராட்டினர்.

இந்நிலையில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நண்பர்களே! அடுத்த படத்தில் நடிக்க என் உருவ அமைப்பை ஒத்த 10 to 50 வயதில் சற்றே அனுபவமுள்ள நடிகர்கள் தேவை!புகைப்படத்துடன் ஒரு நிமிட வீடியோவில் திறமையை பதிவு செய்து அனுப்பவும்.Please விருப்பமுள்ள அனைவரும் முயலாமல், பொருத்தமுள்ளவர்கள் அனுகவும். bioscopefilmframers.artists@gmail.com” என பதிவிட்டுள்ளார்.