‘உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள்’ தொண்டர்களுடன் சந்திப்பு!

 

‘உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள்’ தொண்டர்களுடன் சந்திப்பு!

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி, அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் தொண்டர்களை சந்தித்தார்.

உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 66 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வரும் நிலையில், ட்விட்டரில் HBDKamalHaasan என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

‘உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள்’ தொண்டர்களுடன் சந்திப்பு!

நடிகர் கமல்ஹாசன் லாக்டவுனுக்கு முன்பு இந்தியன் 2 படிப்பில் நடித்து வந்தார். அந்த படப்பிடிப்பின் போது ஏற்பட்ட திடீர் விபத்தில் 3 பேர் உயிரிழந்ததால், படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து லாக்டவுன், படப்பிடிப்பு அனுமதி மறுப்பு உள்ளிட்ட காரணங்களால் தள்ளிப்போன ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. இதையடுத்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க தயாராகிவிட்டார் கமல்ஹாசன். இன்று அவரது பிறந்தநாளையொட்டி, 232 படத்தின் டீசர் வெளியாகவுள்ளது.

‘உலக நாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள்’ தொண்டர்களுடன் சந்திப்பு!

சினிமா ஒருபுறம் இருக்க, மறுபுறம் அரசியலில் களமிறங்கியிருக்கும் கமல்ஹாசன் இன்று தனது பிறந்தநாளையொட்டி சென்னை ஆழ்வார்பேட்டையில், தொண்டர்களை சந்தித்தார்.