கொரோனா பாதிப்பால் மூத்த வங்காள நடிகர் காலமானார்!

 

கொரோனா பாதிப்பால் மூத்த வங்காள நடிகர் காலமானார்!

கொடிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 20 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் உயிரிழப்பு குறைவாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இருப்பினும் நாளுக்கு நாள் பாதிப்பும் உயிரிழப்பும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனிடையே பல பிரபலங்களும் கொரோனா தொற்றால் உயிரிழக்கின்றனர். இந்த நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மூத்த வங்காள நடிகர் அருண் குஹாதகுர்தா காலமானார்.

கொரோனா பாதிப்பால் மூத்த வங்காள நடிகர் காலமானார்!

லாப்டாப் (2012), பிஷோர்ஜோன் (2017), சினிமாவாலா (2016) போன்ற படங்களில் நடித்த இவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் கொல்கத்தாவில் உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு வங்காளக் கலைஞர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.