‘சிம்புக்கு கொரோனா வந்தால் தான் தெரியும்’ – கருணாஸ் காட்டம்!

 

‘சிம்புக்கு கொரோனா வந்தால் தான் தெரியும்’ – கருணாஸ் காட்டம்!

திரையரங்குகளில் 50% பார்வையாளர்களை அனுமதித்தால் போதும் என எம்.எல்.ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை நந்தனத்தில் இருந்து பசும்பொன் வரை தேசிய தெய்வீக யாத்திரை நடத்த அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் கருணாஸ் மனு அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ், ‘ 1994ம் ஆண்டு தேவர் சிலையை ஜெயலலிதா திறந்து வைத்தார். மதுரை ஏர்போர்டுக்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க வேண்டும். கள்ளர், மறவர் உள்ளிட்ட இனத்தோரை சேர்த்து தேவர் இனம் என்று அறிவித்த அரசாணையை நடைமுறைபடுத்த வேண்டும்’ என்று கூறினார்.

‘சிம்புக்கு கொரோனா வந்தால் தான் தெரியும்’ – கருணாஸ் காட்டம்!

தொடர்ந்து, ‘தேசிய தெய்வீக யாத்திரையில் 12 கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொள்ளவிருக்கிறோம். அதற்கு அனுமதி கோரி மனு அளித்திருக்கிறோம். முதல்வர் பழனிசாமி பரப்புரை முடிந்து சென்னை வந்த பிறகு, அவரிடமும் மனு கொடுக்க உள்ளோம். திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதித்தது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். 50% இருக்கைகளுக்கு அனுமதி அளித்தால் போதும், இல்லையெனில் இத்தனை மாதங்கள் பட்ட கஷ்டம் வீணாக போய்விடும்’ என்று தெரிவித்தார்.

‘சிம்புக்கு கொரோனா வந்தால் தான் தெரியும்’ – கருணாஸ் காட்டம்!

மேலும் சிம்பு பேசியதற்கு பதில் அளித்த அவர், ‘அவருக்கு கொரோனா வந்தால் தான் தெரியும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு நான் மீண்டு வந்துள்ளேன். கொரோனா தொற்றை வெல்வோம், கொல்வோம் என்று அவர் கூறியது தவறு’ என்றும் கூறினார்.