கொரோனா மருந்தை பதுக்கிய கவுதம் காம்பீர் அறக்கட்டளை… தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்!

 

கொரோனா மருந்தை பதுக்கிய கவுதம் காம்பீர் அறக்கட்டளை… தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்!

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்பியுமான கவுதம் காம்பீரின் அறக்கட்டளை சட்டவிரோதமாக ஃபாபிஃப்ளூ மருந்தை கையிருப்பு வைத்திருந்தததுடன், கொரோனா நோயாளிகளுக்கும் கொடுத்துள்ளதால் தாமதமின்றி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் தகவல் கூறியுள்ளது. நாட்டில் கொரோனா பரவல் குறைந்துவந்தாலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. இதனால் சிகிச்சைக்குப் பயன்படும் மருந்துகளுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கொரோனா மருந்தை பதுக்கிய கவுதம் காம்பீர் அறக்கட்டளை… தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்!

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் Fabiflu என்ற மருந்துக்கும் டெல்லியில் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. டெல்லியில் எங்கேயும் கிடைக்காத இம்மருந்து காம்பீரின் அறக்கட்டளையிடம் இருந்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் பெரும் சர்ச்சைக்குள்ளானதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்த வழக்கு மே 31ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது.

கொரோனா மருந்தை பதுக்கிய கவுதம் காம்பீர் அறக்கட்டளை… தாமதமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்!

அந்த அறிக்கையை சரமாரியாக விமர்சித்த நீதிமன்றம், இது ஒரு அறிக்கையா? இது குப்பை. இதற்கு சட்டப்பூர்வமான எந்த அடிப்படையும் இல்லை என மிகக் கடுமையாகப் பேசினர். மேலும் நீதிபதிகள், “ஒரு அறக்கட்டளைக்கு இவ்வளவு மருந்துகளை எப்படி வழங்க முடியும்? ஒரே நேரத்தில் ஒருவரால் எப்படி 4,000 மருந்துகளை வாங்க முடியும். இந்த மருந்திற்குப் பற்றாக்குறை இல்லை எனக் கூற வேண்டாம். இந்த மருந்திற்குப் பற்றாக்குறை இருந்தது அனைவருக்கும் தெரியும். நாங்கள் கண்களை மூடிக்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். எங்கள் எளிதாக ஏமாற்றிவிடலாம் என்று நீங்கள் நினைக்காதீர்கள். விளைவு பயங்கரமாக இருக்கும்” என எச்சரித்திருந்தனர்.