“ஈரோட்டில் பிரம்மாண்டமான காய்கறி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை” – அமைச்சர் முத்துச்சாமி பேட்டி

 

“ஈரோட்டில் பிரம்மாண்டமான காய்கறி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை” – அமைச்சர் முத்துச்சாமி பேட்டி

ஈரோடு

ஈரோட்டில் தமிழகத்திலேயே பிரம்மாண்டமான காய்கறி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பொதுமக்களின் குறைகளை தெரிவிப்பதற்கான புதிய வாட்ஸ்அப் செயலியை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த புதிய செயலி மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாக செல்லும் என்றும், புகாரின் தன்மையை பொறுத்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

பழைய கட்டிடங்களை பொறுத்த வரை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அரசு செயல்படும் என கூறிய அமைச்சர் முத்துசாமி, இனி எந்த ஒரு கட்டிடமும் விதிமுறைகளை மீறி கட்ட முடியாது என்பதை உறுதிபட தெரிவிப்பதாகவும், அதேவேளையில் விதிகளைமீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், சாயக்கழிவு நீர், நிலத்தடி நீர் மாசு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார்.

“ஈரோட்டில் பிரம்மாண்டமான காய்கறி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை” – அமைச்சர் முத்துச்சாமி பேட்டி

ஈரோடு சோலார் பகுதியில் மிகப்பெரிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான ஆய்வுப் பணி நடைபெறுவதாகவும், இதுகுறித்து உயர் அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் அமைச்சர் முத்துசாமி கூறினார். அதேபோல், ஈரோட்டில் தமிழ்நாட்டிலேயே இதுவரை இல்லாத அளவில் மிக பிரம்மாண்டமாக காய்கறி மார்க்கெட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கோயம்பேடு மார்க்கெட்டை விட பிரம்மாண்டமாக இருக்கும் வகையில் இந்த மார்க்கெட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். மேலும், இதற்கான ஆய்வு நடந்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

அத்துடன், ஈரோட்டில் டெக்ஸ்டைல்ஸ் யுனிவர்சிட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நீர்வழி புறம்போக்கில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். தொடர்ந்து, நேதாஜி காய்கறி மார்க்கெட் வளாகத்தில் ரூ.30.85 கோடி மதிப்பிலான புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணியை தொடங்கிவைத்த அவர், ஈரோடு வைரா பாளையம் காவிரி ஆற்றின் கரையில் 3.41 எக்கர் நிலத்தை மியாவாக்கி முறையில் அடர் வனப்பகுதியாக மாற்றும் பணியினை தொடங்கி வைத்தார்.