போலி பத்திரிகையாளர் சங்கத்தின் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை!

 

போலி பத்திரிகையாளர் சங்கத்தின் அடையாள அட்டை வைத்திருப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை!

சமீபகாலமாக சென்னையில் பிடிபடும் பல கிரிமினல் கும்பல்களிலும் ‘பிரஸ்’ என்று கார்டு வைத்திருக்கும் ஆட்கள் சிக்குவது வாடிக்கையாகி இருக்கிறது. இது போன்ற பத்திரிகையாளர்களுக்கு மட்டும் தனிச் சங்கங்களும் இயங்குகின்றன. இந்த போலிப் பத்திரிக்கையாளர்கள் மட்டுமல்ல, பல போலிப் பத்திரிகைகள் இருப்பதும் அந்த போலிப் பத்திரிகையில் வேலைபார்க்கும் செய்தியாளர்களுக்கு தமிழக அரசு வழங்கும் அக்ரிடேஷன் எனப்படும் அரசு அங்கீகாரம் செய்யப்பட்ட அடையாள அட்டைகள் தமிழ்நாடு செய்திதுறை வழங்கி இருப்பது தான் அதிர்ச்சியான விஷயம். சென்னையில் உள்ள தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ஏதாவது ஒரு பத்திரிக்கையில் வேலை செய்வதாக கூறி போலி அடையாள அட்டை ஒன்றை ரெடி பண்ணி வைத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல், வாகனங்களில் பிரஸ் என எழுதி ஓட்டியுள்ளனர். இதைக்கண்டால் போக்குவரத்து காவலர்களிடமிருந்து எஸ்கேப் ஆகிவிடலாம் என்பது போலி பத்திரிக்கையாளர்களின் தப்புகணக்கு… இதனால் உண்மையான பத்திரிக்கையாளர்கள் யார் என காவலர்களே குழம்புகின்றன.

Uber Eats

இந்நிலையில் மத்திய அரசின் பெயரை குறிப்பிட்டு போலி பத்திரிகையாளர் சங்க அடையாள அட்டை வைத்துள்ளவர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.