“மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை” – அமைச்சர் செந்தில்பாலாஜி

“மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை”  – அமைச்சர் செந்தில்பாலாஜி

ஒரு வாரத்திற்குள் அனைத்து மதுக்கடைகளிலும் விலை பட்டியல் வைக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

“மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை”  – அமைச்சர் செந்தில்பாலாஜி

சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் அலுவலக கூட்டரங்கில், டாஸ்மாக் நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய என்னென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார்.இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் [பாலாஜி, “தமிழகத்தில் 5 ஆயிரத்து 410 டாஸ்மாக் கடைகள், 2808 பார்கள் உள்ளது. இதில் விதி மீறல் காரணமாக 529 கடைகளுக்கு 1072 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்அதிக விலைக்கு டாஸ்மாக் கடைகளில் மது பானங்களை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும்.

“மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை”  – அமைச்சர் செந்தில்பாலாஜி

அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பாகவும் ஒரு வாரத்திற்குள் விலைப்பட்டியலை வைக்கவேண்டும். ஒரு நிமிடம் கூட கடைகளை அதிகமாக திறந்து வைத்து மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. கூடுதல் நேரம் கடைகளை திறந்து வைத்து மதுபானங்களை விற்பனை தெரியவந்தால், விற்பனையாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.டாஸ்மாக்கை பொறுத்தவரை விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப் படவில்லை. வருங்காலங்களில் இலக்கு நிர்ணயிக்கப் போவது இல்லை. டாஸ்மாக் கடைகளை குறைப்பது என்பது பற்றி உறுதியாக எடுக்கப்பட வேண்டிய முடிவு. முதலமைச்சரின் ஆலோசனைப்படி டாஸ்மாக் நிர்வாகம் செயல்படும்” என்று தெரிவித்தார்.