போலீஸ் போல் நடித்து, தொழிலதிபரிடம் ரூ.76 லட்சம் வழிப்பறி- 5 பேர் கைது

 

போலீஸ் போல் நடித்து, தொழிலதிபரிடம் ரூ.76 லட்சம் வழிப்பறி- 5 பேர் கைது

கன்னியாகுமரி

கேரள நகைக்கடை உரிமையாளரிடம் போலீசார் என கூறி, 76 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற 5 பேரை போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர்.

திருவனந்தபுரம் நெய்யாற்றின் கரை பகுதியை சேர்ந்தவர் நகைக்கடை உரிமையாளர் சம்பத். இவர் கன்னியாகுமரி பகுதியில் உள்ள நகைக் கடைகளுக்கு மொத்தமாக நகை விற்பனை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று, நாகர்கோயிலில் உள்ள கடைகளுக்கு நகையை கொடுத்துவிட்டு விற்பனை பணமான 76 லட்சம் ரூபாயுடன் காரில் திருவனந்தபுரத்துக்கு புறப்பட்டு சென்றனார்.

போலீஸ் போல் நடித்து, தொழிலதிபரிடம் ரூ.76 லட்சம் வழிப்பறி- 5 பேர் கைது

இந்த நிலையில் குமரி மாவட்டம் தக்கலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அவரது காரை பின்தொடர்ந்து போலீஸ் உடையில் வந்த 4 பேர் மறித்து, சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவரிடம் இருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததாக கூறி, பணத்தை பறித்துச்சென்றுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சம்பத் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸ் போல் நடித்து, தொழிலதிபரிடம் ரூ.76 லட்சம் வழிப்பறி- 5 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி., பத்ரி நாராயணன் கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த கோபக்குமார், சுரேஷ்குமார், கண்ணன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை அடுத்து, திருவனந்தபுரத்தில் பங்கியிருந்த 4 பேரையும் ரகசிய தகவலின் பேரில் போலீசார் அதிரடியாக கைதுசெய்தனர்.

மேலும், இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சஜின்குமார் என்பரையும் கைதுசெய்தனர். கொள்ளையர்களிடம் இருந்து 76 லட்சம் ரூபாய் பணம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், செல்போன்கள் மற்றும் போலீஸ் உடைகள் பறிமுதல் செய்தனர்.