28 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் கோயில் வளாகத்தில் தீபாவளி கொண்டாட்டம்… ஆச்சார்ய சத்யேந்திர தாஸ்

28 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் கோயில் வளாகத்தில் தீபாவளி கொண்டாட்டம்… ஆச்சார்ய சத்யேந்திர தாஸ்

28 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் கோயில் வளாகத்தில் தீபாவளி பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளதாக ராம் ஜென்மபூமி தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் தெரிவித்தார்

மனிதர்கள் வாழும் காலத்தை நான்கு யுகங்களாக பிரித்து சொல்கிறது புராணங்கள். அதன்படி அவை கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மற்றும் கலி யுகம் ஆகும். திரேதா யுகத்தில் 4ல் மூன்று பகுதி மக்கள் அறநெறியுடன் வாழ்வார்கள். எஞ்சிய ஒரு பகுதியினர் அறமில்லாமலும் வாழ்வார்கள். இந்த யுகமான 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்டதாக புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.

28 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் கோயில் வளாகத்தில் தீபாவளி கொண்டாட்டம்… ஆச்சார்ய சத்யேந்திர தாஸ்
ஆச்சார்ய சத்யேந்திர தாஸ்

28 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ராமர் கோயில் வளாகத்தில் தீபாவளி பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது என்று ராம் ஜென்மபூமி தலைமை பூசாரி ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக ஆச்சார்ய சத்யேந்திர தாஸ் கூறியதாவது: இந்த ஆண்டு தீபாவளி பிரமாண்டமாக இருக்கும், 28 ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் ராமர் கோயில் வளாகத்தில் கொண்டாடப்படும்.

28 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் கோயில் வளாகத்தில் தீபாவளி கொண்டாட்டம்… ஆச்சார்ய சத்யேந்திர தாஸ்
ராமர் கோயில் பூமி பூஜை விழா

கடவுள் ராமர் 28 ஆண்டுகளாக ஒரு தார்ச்சாலையின் கீழ் இருக்க வேண்டியிருந்தது. திரேதா யுகத்தில் தீபாவளி கொண்டாடப்பட்டது போன்று ராமர் கோயில் வளாகம் அலங்கரிக்கப்படும். கோயிலும் முழுப்பகுதியிலும் மண் விளக்குகளில் தீபம் ஏற்றப்படும். முதல்வரால் ஆர்த்தி எடுக்கப்படும், ஏராளமான மக்களை ஈர்க்கும். இந்த தீபாவளி திரேதா யுகத்தின் அடையாளமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.