கேரளாவில் அதிகபட்சம் 2 தாமரை பூக்கும்.. பினராயி விஜயன் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு.. கருத்து கணிப்பு

கேரளாவில் அதிகபட்சம் 2 தாமரை பூக்கும்.. பினராயி விஜயன் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு.. கருத்து கணிப்பு

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவிக்கிறது.

கேரளாவில் 140 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் அம்மாநிலத்தில் டைம்ஸ் நவ் மற்றும் சி வோட்டர்ஸ் இணைந்து தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு ஒன்றை மேற்கொண்டது. எதிர்வரும் கேரள சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

கேரளாவில் அதிகபட்சம் 2 தாமரை பூக்கும்.. பினராயி விஜயன் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு.. கருத்து கணிப்பு
காங்கிரஸ்

டைம்ஸ் நவ்-சி வோட்டர்ஸின் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பின்படி, இடது ஜனநாயக முன்னணி மொத்தமுள்ள 140 இடங்களில் 78 முதல் 86 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. அதனால் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும். அதேசமயம் ஐக்கிய ஜனநாயக முன்னணி கடும் போட்டியை கொடுக்கும். எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக முன்னணி 52 முதல் 60 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது.

கேரளாவில் அதிகபட்சம் 2 தாமரை பூக்கும்.. பினராயி விஜயன் ஆட்சியை தக்க வைக்க வாய்ப்பு.. கருத்து கணிப்பு
பா.ஜ.க.

அதேவேளையில், கேரளாவில் புதிதாக எழுச்சி கண்டுள்ள பா.ஜ.க.வுக்கு இந்த தேர்தலில் அந்த கட்சியினர் எதிர்பார்தத அளவுக்கு வெற்றி கிடைக்காது என கருத்து கணிப்பு சொல்கிறது. கேரளாவில் பா.ஜ.க.வுக்கு அதிகபட்சம் 2 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என தகவல். மற்றவர்கள் (பிற கட்சிகள்) 2 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. எதிர்வரும் தேர்தலில் இடது ஜனநாயக முன்னணி மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணிகளின் வாக்கு சதவீதம் சிறிது குறைய வாய்ப்புள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது.