அரசை விமர்சித்ததால்தான் கோவா கவர்னரை மாற்றினீர்கள்.. அப்பம் மேற்கு வங்க கவர்னர்? காங்கிரஸ் கேள்வி…

அரசை விமர்சித்ததால்தான் கோவா கவர்னரை மாற்றினீர்கள்.. அப்பம் மேற்கு வங்க கவர்னர்? காங்கிரஸ் கேள்வி…

கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில கவர்னராக இருந்த சத்ய பால் மாலிக் கடந்த சில தினங்களுக்கு முன் மேகாலயா கவர்னராக பணிமாற்றம் செய்யப்பட்டார். கோவா பா.ஜ.க. அரசை கவர்னர் சத்ய பால் மாலிக் சிறிது விமர்சனம் செய்ததாகவும், அதனால்தான் அவர் மேகாலயாவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதாகவும் ஒரு தகவல் உலாவி வருகிறது.

அரசை விமர்சித்ததால்தான் கோவா கவர்னரை மாற்றினீர்கள்.. அப்பம் மேற்கு வங்க கவர்னர்? காங்கிரஸ் கேள்வி…

இந்த சூழ்நிலையில் கவர்னர் சத்ய பால் மாலிக்கை மேகாலயா கவர்னராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அபிஷேக் மானு சிங்வி டிவிட்டரில், மாநில அரசை லேசாக கருத்து\விமர்சனம் செய்ததற்காக கோவா கவர்னர் மாலிக்கை இரண்டாவது முறையாக பா.ஜ.க., பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சகம் பணி இடமாற்றம் செய்துள்ளது. அதேசமயம் வெளிப்படையாக இதே நிலைப்பாடு பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களுக்கு பொருந்தாது இல்லை. உதாரணம்.. மேற்கு வங்கம். என பதிவு செய்து இருந்தார்.

அரசை விமர்சித்ததால்தான் கோவா கவர்னரை மாற்றினீர்கள்.. அப்பம் மேற்கு வங்க கவர்னர்? காங்கிரஸ் கேள்வி…

மேற்கு வங்க கவர்னராக இருக்கும் ஜக்தீப் தங்கர், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், கவர்னர் ஜகதீப் தங்கருக்கும் அடிக்கடி பல்வேறு விவகாரங்களில் நேரடியாக மோதி வருவது குறிப்பிடத்தக்கது.