அசாமில் அடுத்து தாடி, தொப்பி மற்றும் லுங்கி மக்களின் அரசாங்கம்… சர்ச்சையை கிளப்பும் ஏ.ஐ.யு.டி.எப்.

அசாமில் அடுத்து தாடி, தொப்பி மற்றும் லுங்கி மக்களின் அரசாங்கம்… சர்ச்சையை கிளப்பும் ஏ.ஐ.யு.டி.எப்.

அசாமில் அடுத்து அமையும் அரசாங்கம் தாடி, தொப்பி மற்றும் லுங்கி மக்களின் அரசாங்கமாக இருக்கும் என ஏ.ஐ.யு.டி.எப். கட்சி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அசாமில் 126 உறு்பபினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 27ம் தேதி முதல் மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. கடைசி கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது.

அசாமில் அடுத்து தாடி, தொப்பி மற்றும் லுங்கி மக்களின் அரசாங்கம்… சர்ச்சையை கிளப்பும் ஏ.ஐ.யு.டி.எப்.
தேர்தல்

இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அசாமில் பார்பெடாவில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏ.ஐ.யு.டி.எப்.) கட்சியின் பத்ருதீன் அஜ்மலின் மகன் அப்துர் ரஹிம் அஜ்மல் பேசிய கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த கூட்டத்தில் அப்துர் ரஹிம் அஜ்மல் பேசுகையில் கூறியதாவது:

அசாமில் அடுத்து தாடி, தொப்பி மற்றும் லுங்கி மக்களின் அரசாங்கம்… சர்ச்சையை கிளப்பும் ஏ.ஐ.யு.டி.எப்.
கூட்டத்தல் பேசும் அப்துர் ரஹிம் அஜ்மல்

இந்த முறை அது உங்கள் அரசாங்கமாக இருக்கும். ஏழைகளின் அரசாங்கம், வளர்ச்சிக்கான அரசாங்கம், தாடி, தொப்பி மற்றும் லுங்கி மக்களின் அரசாங்கம், சிண்டூர் அணிந்த நம் மகளின் அரசாங்கமாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அப்துர் ரஹிம் தனது பேச்சின்போது முஸ்லிம் அரசாங்கம் அமையும் என்று மறைமுகமாக கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.