முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் காலமானார்

 

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் காலமானார்

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர்(104). வயது மூப்பு காரணமாக ராமேஸ்வரத்தில் காலமானார்.

இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், “மேதகு முன்னாள் குடியரசுத்தலைவர் Dr.ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் அன்புச் சகோதரர் மீரான் லெப்பை மரைக்காயர் மறைவெய்திய செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அன்னாரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மூத்த சகோதரர் காலமானார்

இதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “கலாமின் சகோதரர் முகமது முத்துமீரான் மரைக்காயர் மறைந்த செய்தியறிந்து துயரத்திற்கு உள்ளானேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “இந்திய மக்களின் மனங்களில் வாழும் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் அவர்களின் சகோதரர், திரு.முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து வருந்தமடைந்தேன். திரு.கலாம் அவர்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய அன்னாரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.