‘என்னை யாரோ கடத்திட்டாங்கப்பா’ : பெற்றோரை ஏமாற்ற சிறுவர்கள் நடத்திய கடத்தல் நாடகம்!

 

‘என்னை யாரோ கடத்திட்டாங்கப்பா’ : பெற்றோரை ஏமாற்ற  சிறுவர்கள் நடத்திய கடத்தல் நாடகம்!

சென்னையில் இரண்டு சிறுவர்கள் வெவ்வேறு இடத்தில் கடத்தல் நாடகம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி சுபத்ரால் தெருவைச் சேர்ந்தவர், டோளா ராம். இவரது மகன் தேவேந்திரன். 14 வயதான இவர் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளி இல்லை என்பதால் தேவேந்திரனை டோளா ராம் டியூஷனில் சேர்த்துள்ளார். இதனால் இவர் வழக்கம்போல் நேற்று அக்.8 டியூசனுக்கு சென்றுள்ளார்.

‘என்னை யாரோ கடத்திட்டாங்கப்பா’ : பெற்றோரை ஏமாற்ற  சிறுவர்கள் நடத்திய கடத்தல் நாடகம்!

சிறிது நேரத்தில் தேவேந்திரனின் செல்போன் எண்ணில் இருந்து அவரது தந்தை டோளா ராமிற்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர் உன் மகனை கடத்தி விட்டோம். 10 லட்சம் பணம் தரவில்லை என்றால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த டோளா ராம் செய்வதறியாது திகைத்துள்ளார். பின்னர் மீண்டும் வந்த அழைப்பில் பேசிய அவரது மகன் தேவேந்திரன், சேப்பாக்கம் ஸ்டேடியம் அருகே தன்னை கடத்தியவர்கள் இறக்கிவிட்டு சென்றதாக கூறியுள்ளார்.

‘என்னை யாரோ கடத்திட்டாங்கப்பா’ : பெற்றோரை ஏமாற்ற  சிறுவர்கள் நடத்திய கடத்தல் நாடகம்!

இதுகுறித்து அண்ணா சாலை போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் சிறுவனை விசாரித்துள்ளனர். அதில் சிறுவன் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து உள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, சிறுவன் அவரது நண்பனுடனே ஆட்டோவில் சென்றது தெரியவந்தது. இதனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் சிறுவனின் கடத்தல் நாடகம் அம்பலமானது.

‘என்னை யாரோ கடத்திட்டாங்கப்பா’ : பெற்றோரை ஏமாற்ற  சிறுவர்கள் நடத்திய கடத்தல் நாடகம்!

டியூசனுக்கு செல்வதாகக்கூறி, நண்பர்களுடன் தேவேந்திரன் ஊர் சுற்றியுள்ளார். வீட்டுக்கு செல்ல நீண்ட நேரம் ஆகி விட்டதால் தந்தை அடிப்பார் என்று பயந்து நண்பர்கள் உதவியுடன் கடத்தல் நாடகத்தை அரங்கேறியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஜாம் பஜார் போலீசார் சிறுவனை கண்டித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் கொளத்தூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் யூசுப்பின் மகன் உமர்(14) விளையாடிவிட்டு மாலை தாமதமாக வீட்டுக்கு வந்துள்ளார். இதுகுறித்து அவர் தந்தை விசாரித்த போது, தன்னை சிலர் ஆட்டோவில் கடத்தி கொண்டு சென்றதாக கூறியுள்ளார் . இதனால் பயந்து போன யூசுப் போலீசில் புகார் அளிக்க, போலீஸ் விசாரணையில் உமர் நாடகமாடியது தெரியவந்தது.