பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் திடீர் மரணம் : சோகத்தில் திரையுலகினர்!

 

பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் திடீர் மரணம் : சோகத்தில் திரையுலகினர்!

பாலிவுட் நடிகர் ராகுல் ராய் உடல்நல குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 52.

பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் திடீர் மரணம் : சோகத்தில் திரையுலகினர்!

பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட் இயக்கிய ஆஷிக்கி படம் கடந்த 1990 ஆம் ஆண்டு வெளியானது. இதில் ஹீரோ வாக அறிமுகமானவர் நடிகர் ராகுல் ராய். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனு அகர்வால் நடித்தார். இப்படம் ராகுல் ராய்க்கு நல்ல வரவேற்பை பெற்று தந்த நிலையில் ஜூனூன், பிர் தேரி கஹானி யாத் ஆயி என பல படங்களில் தோன்றினார். பின்னர் அவர் 2006 இல் டிவி ரியாலிட்டி ஷோவான இந்தி பிக் பாஸின் முதல் சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

பிக் பாஸ் முதல் சீசன் வெற்றியாளர் திடீர் மரணம் : சோகத்தில் திரையுலகினர்!

இந்நிலையில் ‘எல்.ஏ.சி., லிவ் தி பேட்டில் இன் கார்கில்’ என்ற திரைப்படத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட ராகுல் ராய்க்கு திடீரென உடல்நல மோசமானது. அதாவது அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து ராகுல் ராய் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டநிலையில் நேற்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராகுல் ராய் மறைவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.