T20 யில் அதிகபட்ச ரன் விளாசியவரின் பிறந்த நாள் இன்று!

 

T20 யில் அதிகபட்ச ரன் விளாசியவரின் பிறந்த நாள் இன்று!

T20 போட்டிகள் கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றி அமைத்தன. ஏனெனில், 5 நாட்கள் டெஸ்ட் போட்டியை ரசிக்கும் ரசிகர்கள் குறைந்தனர். அவர்களின் மனநிலையில் ஒருநாள் போட்டியில் குவிய, அதை இன்னும் சுவாரஸ்யமாக்கும் விதமாக உருவாக்கப்பட்டவையே T20 போட்டிகள்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் சர்வதேச T20 போட்டிகளில் தனிமனிதர் அடித்த அதிகபட்ச ஸ்கோரை விளாசியவர். (பிரீமியர் லீக் போட்டிகளில் கெயில் அதிக ரன்கள்)

T20 யில் அதிகபட்ச ரன் விளாசியவரின் பிறந்த நாள் இன்று!

2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3-ம் தேதி ஜிம்பாம்வே அணியோடு ஆஸ்திரேலியா T20 போடியில் மோதியது. அதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பின்ச் ஓப்பனிங் வீரராகக் களம் இறங்கினார். 10 சிக்ஸர்கள், 16 பவுண்ட்ரிகளோடு 76 பந்துகளில் 172 ரன்களை விளாசினார் பின்ச். ஸ்ட்ரைக் ரேட் 226.31. சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தச் சாதனை இன்னும் முறியடிப்பட வில்லை. அன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இன்று பிறந்த நாள் காணும் ஆரோன் பின்ச்க்கு 34 வயதாகிறது. 129 ஒருநாள் போட்டிகளில் ஆடி, 4,983 ரன்களை விளாசியிருக்கிறார். இந்தியா – ஆஸ்திரேலியா தொடரில் 5000 ரன்களைத் தொட்டு விடுவார். இதில், 16 சதங்களும் 27 அரை சதங்களும் அடங்கும்.

T20 யில் அதிகபட்ச ரன் விளாசியவரின் பிறந்த நாள் இன்று!

T20 போட்டிகளில் 64 – ஆட்டங்களில் ஆடி, 2114 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 2 சதங்களும், 12 அரை சதங்களும் அடங்கும். 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் பின்ச், 278 ரன்கள் எடுத்துள்ளார். அதில் இரு அரை சதங்கள் அடங்கும்.

ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி, புனே வாரியர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இண்டியன்ஸ், குஜராத் லைன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகளில் ஆடியிருக்கிறார்.