டெல்லி துணைமுதல்வர் வீட்டை தாக்கிய பா.ஜ.க.வினர்.. டெல்லி அரசியல் வரலாற்றில் கருப்பு நாள்.. ஆம் ஆத்மி

டெல்லி துணைமுதல்வர் வீட்டை தாக்கிய பா.ஜ.க.வினர்.. டெல்லி அரசியல் வரலாற்றில் கருப்பு நாள்.. ஆம் ஆத்மி

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வீட்டை போலீசார் உதவியுடன் பா.ஜ.க. குண்டர்கள் தாக்கியதாகவும், டெல்லி அரசியல் வரலாற்றில் இன்று கருப்பு தினம் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லியில் நேற்று துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வீடு தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை டெல்லி போலீஸ் உதவியுடன் பா.ஜ.க.வின் குண்டர்கள்தான் அரங்கேற்றினர் என்று ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியின் அரசியல் வரலாற்றில் இன்று கருப்பு தினம் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லி துணைமுதல்வர் வீட்டை தாக்கிய பா.ஜ.க.வினர்.. டெல்லி அரசியல் வரலாற்றில் கருப்பு நாள்.. ஆம் ஆத்மி
மனிஷ் சிசோடியா

துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வீடு தாக்கப்பட்டது தொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், சிசோடியா வெளியே சென்ற நேரம் போலீசார் இருக்கும் போது குண்டர்கள் அவரது வீட்டுக்குள் நுழைந்தனர். டெல்லியில் பா.ஜ.க. ஏன் நாளுக்கு நாள் மிகவும் அவநம்பிக்கை கொள்கிறது? என்று பதிவு செய்து இருந்தார். ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறுகையில், சிசோடியாவின் வீட்டுக்குள் குண்டர்கள் நுழைவதை காவல்துறையினர் தடுக்கவில்லை. சிசோடியாவின் வீட்டை சுற்றி இருந்த தடுப்புகளை கூட அவர்கள் அகற்றி விட்டனர் என குற்றம் சாட்டினார். ஆனால் இந்த குற்றச்சாட்டுக்களை போலீசார் மறுத்தனர்.

டெல்லி துணைமுதல்வர் வீட்டை தாக்கிய பா.ஜ.க.வினர்.. டெல்லி அரசியல் வரலாற்றில் கருப்பு நாள்.. ஆம் ஆத்மி
அமித் ஷா

ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான அதிஷி மார்லினா கூறுகையில், டெல்லி அரசியல் வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள். மனிஷ் சிசோடியா அவரது வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது குடும்பத்தை தாக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தற்போது தனது கட்சி குண்டர்களையும், டெல்லி போலீசாரையும் பயன்படுத்தி வருகிறார் என்று கூறினார்.