கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஆதார் கட்டாயம்!

 

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஆதார் கட்டாயம்!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 1,286பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,872 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ஆதார் கட்டாயம்!
இந்நிலையில் சென்னையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள், ஆய்வு மேற்கொள்ள நபர்களின் முழு விவரங்களை பெற தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. தனியார் ஆய்வகங்கள் முழு விவரத்தையும் பெறாததால் அவர்களை தொடர்பு கொள்ளுதல் பல சிரமங்களை ஏற்படுத்துவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதைதொடர்ந்து கொரனா பரிசோதனை மேற்கொள்ள ஆதார் கட்டாயம் என்றும், தொலைபேசி எண்களை பெற்று உறுதிப்படுத்திய பிறகே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தனியார் ஆய்வகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக டாஸ்மாக் கடைகள், சலூன் கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் ஸ்பா நிலையங்கள் செல்பவர்கள் ஆதார் அட்டையை கட்டாயம் கொண்டு செல்ல வேண்டுமென தமிழக அரசு தெரிவித்தது.