கறுப்பு MGR., காவி MGR, காங்கிரஸ் MGR… இன்னும் என்னென்ன வரப்போகிறதோ?

 

கறுப்பு MGR., காவி MGR, காங்கிரஸ் MGR… இன்னும் என்னென்ன வரப்போகிறதோ?

தேர்தல் வந்துவிட்டாலே பழைய விஷயங்களுக்கு உயிர் கொடுத்து ஆறு மாதங்கள் உலாவ விடுவார்கள். அப்படித்தான் ஒவ்வொரு தேர்தலிலும் எம்.ஜி.ஆரை ஆளாளுக்கு பங்கு போட்டுக்கொள்வதையும் பார்க்க முடியும்.

உன்மையில் எம்.ஜி.ஆர் பெரியார், அண்ணா கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். அதனால், தி.மு.கட்சியில் சேர்ந்தார். தேர்தலில் அவரது நட்சத்திரப் புகழ் பெரிது உதவியது. திராவிட கொள்கைகளை தனது திரைப்படங்கள் மூலமும் கொண்டு சேர்க்க முயன்றார். அவரது பெரும்பாலான படங்களில் சாமி கும்புடுவது போலவோ, தாலி கட்டித் திருமணம் செய்துகொள்வது போலவோ காட்சிகள் இருக்காது. அதற்குப் பதில் சுயமரியாதை திருமணங்களைப் போல மாலை மாற்றிக்கொள்வதுபோலவே இடம்பெறும்.

கறுப்பு MGR., காவி MGR, காங்கிரஸ் MGR… இன்னும் என்னென்ன வரப்போகிறதோ?

அதன்பின் திமுகவிடமிருந்து முரண்பட்டு அதிமுக எனும் கட்சியைத் தோற்றுவித்தார். அவர் இறக்கும்வரை அவர்தான் தமிழ்நாட்டின் முதல்வர். பல முரண்பாடுகளைக் கடந்தும் தமிழக மக்களால் நேசிக்கப்பட்ட ஒரு தலைவர் எனக் கருதப்படுகிறார்.

இப்போது பல வண்ண எம்.ஜி.ஆர் விஷயத்துக்கு வருவோம். விஜயகாந்த் தேமுதிக கட்சி ஆரம்பித்தபோது அவரை கறுப்பு எம்.ஜி.ஆர் என்று தமிழகம் முழுவதும் எழுதி விளம்பரங்கள் செய்தனர். இது அதிமுகவினரை உசுப்பேத்தியது. அதற்கு முன் சில ஆண்டுகள் அதிமுகவில் எம்.ஜி.ஆர் படங்களை அதிகம் பயன்படுத்த வில்லை என்ற விமர்சனமும் இருந்தது. விஜயகாந்த் கட்சியினரின் இந்தச் செயல் அதிமுகவை மீண்டும் எம்.ஜி.ஆரை கையில் எடுக்க வைத்தது. அதிமுக தரப்பில் இந்த விவகாரம் தொடர்பாக அறிவிப்பு ஒன்றுகூட வெளியிடப்பட்டது.

கறுப்பு MGR., காவி MGR, காங்கிரஸ் MGR… இன்னும் என்னென்ன வரப்போகிறதோ?

சமீப விஷயங்களுக்கு வருவோம் என்றால், பாஜகவினர் வேல் யாத்திரை தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டனர். அதன் தொடக்கத்தில் தீப்பற்றி எரிந்து அது முடிவடையும் நேரத்தில் பிஜேபி என்று வரும் அடுத்த நொடியே ஒருபுறம் தாமரையும் மறுபுறம் எம்.ஜி.ஆர் படமும் இடம்பெறும். எம்.ஜி.ஆரின் அம்சமாக மோடி என்கிற வரிகளும் அந்தப் பாடலில் இடம்பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து, சில இடங்களில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி சாயம் பூசப்படுவதும் அதிமுகவினர் அதை எதிர்ப்பதும் நடந்து வருகிறது.

கறுப்பு MGR., காவி MGR, காங்கிரஸ் MGR… இன்னும் என்னென்ன வரப்போகிறதோ?

ரஜினியின் அரசியல் வருகையை எப்போதும் எம்.ஜி.ஆரின் அரசியல் வருகையோடு ஒப்பிட்டு பேசப்படுவது வழக்கம். இப்போதும் அவர் கட்சி தொடங்கியிருப்பதையும் அப்படித்தான் இணைத்து எழுதுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்து வைத்து பேசிய ரஜினி, “கருணாநிதியையே ஆட்சிக்கு வராமல் தடுத்தவர் எம்.ஜி.ஆர்”என்பது உட்பட பல விஷயங்கள் எம்.ஜி.ஆரைப் புகழ்ந்து பேசியிருந்தார். குறிப்பாக, “எம்.ஜி.ஆரின் நல்லாட்சியை என்னால் கொடுக்க முடியும்” என்று அழுத்தம் திருத்தமாகப் பேசியிருந்தார். எம்.ஜி.ஆர் ஆட்சியை ரஜினி புகழ்வதற்கு எப்போதும் மறந்ததில்லை.

இன்று கமல்ஹாசனும் எம்.ஜி.ஆரை கையிலெடுத்திருக்கிறார். ’எம்.ஜி.ஆர். திமுக திலகமும் இல்லை; அதிமுக திலகமும் இல்லை… அவர் மக்கள் திலகம். நான் அவர் மடியில் வளர்ந்தவன்:” என்று எம்.ஜி.ஆருக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்.

கறுப்பு MGR., காவி MGR, காங்கிரஸ் MGR… இன்னும் என்னென்ன வரப்போகிறதோ?

சில நாட்களுக்கு முன் திருச்சி ரவுண்டானாவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை மீது காங்கிரஸ் துண்டு போர்த்தப்பட்டிருந்தது. அதைப்பார்த்த அதிமுக அமைச்சர் நடராஜன் அதை எடுத்துள்ளார். ஆக, காங்கிரஸ் கட்சிக்கும் எம்.ஜி.ஆர் மீது ஒரு கண் இருக்கிறது போல.

இன்னொரு பக்கம் தமிழ்த்தேசியம் பேசும் சிலர் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக எம்.ஜி.ஆர் செயல்பாடுகள் இருந்தது. அதனால், அவரை புகழ்ந்து விழாக்கள் கொண்டாடுவார்கள்.

அதிமுக தரப்பில் கருப்பு, வெள்ளை எம்.ஜி.ஆர் எல்லாம் இல்லை. சூரியன், சந்திரன் போல ஒரே எம்.ஜி.ஆர் தான் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் எம்.ஜி.ஆர் தொடங்கிய கட்சி அதிமுக தான் என்று கூறியிருந்தது. அதன்மூலம் அரசியலில் தாங்கள் மட்டுமே எம்.ஜி.ஆரைப் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லியிருந்தது.

கறுப்பு MGR., காவி MGR, காங்கிரஸ் MGR… இன்னும் என்னென்ன வரப்போகிறதோ?

எம்.ஜி.ஆர் மீது பெரிய புகார் இன்றுவரை பொதுப்பரப்பில் கூறப்பட வில்லை. ஆயினும் அவர் ஆட்சிக்காலம் பற்றி ஆய்வாளர்கள் சில விமர்சனங்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். என்றபோதிலும் அவை மக்கள் மத்தியில் செல்வதில்லை. எனவே, சத்துணவு வழங்கியது உள்பட பொதுமக்களை நேரடியாகச் சென்று சேர்த்த திட்டங்களால் எம்.ஜி.ஆருக்குக் கிடைத்த புகழைப் பயன்படுத்தவே இத்தனை பேர் போட்டிப் போடுகிறார்கள் என்பதே உண்மை. அதனால், இன்னும் பலரும் இந்தப் பட்டியல் நீளக்கூடும்.