ஹோட்டல் முழுக்க தங்கம் தான்… டன் கணக்கில் தங்கம் பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் அறைகள்!

 

ஹோட்டல் முழுக்க தங்கம் தான்… டன் கணக்கில் தங்கம் பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் அறைகள்!

உலகமெங்கும் புதிதாக தொடங்கப்படும் தொழில்களுக்கு சந்தையில் பெரும் போட்டி நிலவி வருகிறது. அதனால், புதிதாக தொழில் தொடங்கும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவர புதிய யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர். அதேபோல் வியட்நாமில் உள்ள ஒரு ஹோட்டல் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக தங்கள் ஹோட்டல் ரூமின் அனைத்து பொருள்களிலும் தங்க முலாம் பூசி உள்ளனர்.

ஹோட்டல் முழுக்க தங்கம் தான்… டன் கணக்கில் தங்கம் பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் அறைகள்!

பல நாடுகளில் கொரோனாவின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வியட்நாம் நாட்டிலும் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது.

வியட்நாமில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட டோல்ஸ் ஹனோய் கோல்டன் லேக் என்ற ஹோட்டலில் தங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தங்கும் அறை முழுவதும் தங்க முலாம் பூசி உள்ளனர். ஹோட்டல் அறையில் உள்ள குளியலறைகள், கை கழுவும் இடங்கள் மற்றும் கழிப்பறைகள் என அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்டு ஜிகுஜிகுவென மின்னுகின்றன.

ஹோட்டல் முழுக்க தங்கம் தான்… டன் கணக்கில் தங்கம் பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் அறைகள்!

ஹோட்டல் அறைகளின் தங்க முலாம் பூசும் திட்டத்திற்காக மட்டும் சுமார் ஒரு டன் (1000 கிலோ) தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அந்த ஹோட்டலின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். டன் கணக்கில் தங்கம் பயன்படுத்தப்பட்டது அறிந்து அனைவரும் வாயடைத்து போய் இந்த ஹோட்டலை இணையத்தில் தேடி வருகின்றனர்.